- Advertisement -
Homeபொழுதுபோக்குமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அஜித்குமார் செய்த செயல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... பெருமூச்சு விட்ட...

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அஜித்குமார் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பெருமூச்சு விட்ட ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு கதாநாயகியாக திரிஷா நடித்து வருகிறார். இதே போல் படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் உள்ளனர். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுவரை படத்திற்கான டைட்டில் விடாமுயற்சி என்றும் இதனை மகிழ் திருமேனி இயக்குவதாகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற நட்சத்திரங்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவே இல்லை.

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து திரிஷா உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறதே தவிர அதற்கான எந்த ஒரு முன்னெடுப்பும் இருப்பது போலவே தெரியவில்லை.

இப்படியான சூழலில் கடந்த அக்டோபர் மாதம் விடாமுயற்சிக்கான படப்பிடிப்பு தொடங்கி, சென்ற மாத தொடக்கம் வரை நடைபெற்றது. இதன்பிறகு பட குழுவினர் சென்னையில் இருந்தனர். இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இப்படியான சூழலில் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார் அஜித் குமார்.

- Advertisement -

ஆனால் அது வழக்கமான பரிசோதனை தான் என்றும், மீண்டும் அவர் அஜர்பைஜான் நாட்டிற்கு செல்ல இருப்பதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அஜித்குமார். இதனால் காரணம் தெரியாமல் ரசிகர்கள் தவித்தனர்.

இப்படியான சூழலில் அவருக்கு மூளைக்கும் காதுக்கும் இடையே செல்லும் நரம்பில் பிரச்சனை இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட கட்டி சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பில் இருந்த அஜித் குமார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்படியான சூழலில் அவர் கோட் சூட்டுடன் தனது மகன் படிக்கும் பள்ளி மைதானத்தில் அமர்ந்து இருப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அஜித் குணமாகிவிட்டதாக கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்