நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர். இப்போது 70 வயதிலும் கம்பீரமான தோற்றத்தில் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும், ராஜ்ய சபா எம்பியாகவும் இருக்கும் கமல்ஹாசன், அடுத்ததாக தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே நடிகர் கமல்ஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டம் இருக்கிறது. அவர் வாணி கணபதி என்ற நாட்டிய கலைஞரை காதல் திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு குஜராத்தி நடிகை சரிகாவை 2வது திருமணம் செய்தார். கமல் – சரிகாவின் மகள்தான் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன்.
பிறகு சரிகாவை விட்டுப் பிரிந்த நடிகர் கமல், நடிகை கௌதமியுடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப் முறையில் பல ஆண்டுகள் குடும்பம் நடத்தினார். பிறகு கௌதமியை விட்டும் பிரிந்து விட்டார். இதற்கிடையே ரம்யா கிருஷ்ணன் சிம்ரன் பூஜாகுமார் ஆண்ட்ரியா போன்றவர்களுடனும் நடிகர் கமலுக்கு நெருங்கிய நட்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தனது படங்களில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் பல படங்களில் முத்த கலைஞனாகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். அழகான ஒரு ஹீரோவாக வலம் வந்த அவரை பலரும் காதலித்தார்கள். இப்போதும் காதலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மிக விரைவில் காதல் வயப்படுபவராக தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும், நடிகர் சத்யராஜூம் பங்கேற்ற ஒரு நேர்காணல் சமீபத்தில் நடந்தது. அப்போது உங்க அப்பா பெங்காலி மொழி கற்றுக்கொண்டு பெங்காலி படத்தில் நடித்தாரே என்று ஸ்ருதிஹாசனிடம் சத்யராஜ் கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், பெங்காலி படத்தில் நடிப்பதற்காக ஒன்றும் அப்பா பெங்காலி மொழி கற்றுக்கொள்ளவில்லை.
ஏன் பெங்காலி கத்துக்கிட்டார் தெரியுமா? அப்போது பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது அப்பாவுக்கு லவ் இருந்தது. அவங்களை இம்ப்ரஸ் பண்ணனும் என்பதற்காக தான் பெங்காலி கத்துக்கிட்டார். படத்துக்காக எல்லாம் அவர் அதை பண்ணலே. அதனால்தான் ஹேராம் படத்துல ராணிமுகர்ஜிக்கு பேரு அபர்ணா. அதுக்கும் இதுக்கும் கனெக்சன் பண்ணிக்குங்க என்று ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





