- Advertisement -
Homeபொழுதுபோக்குபண்டமாற்று முறையில் அஜீத்குமார் விஜய் படங்கள், தமிழ்நாடு கர்நாடகா இடையே இப்படி ஒரு ஒப்பந்தமா? -...

பண்டமாற்று முறையில் அஜீத்குமார் விஜய் படங்கள், தமிழ்நாடு கர்நாடகா இடையே இப்படி ஒரு ஒப்பந்தமா? – வாயடைத்து போன கோலிவுட் வட்டாரம்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரிலீஸாகிறது. விஜய் அஜீத்குமார் படங்கள் என்றாலே தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா உள்பட வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல். அவர்தான் கேரளா கர்நாடகா மாநிலங்களில் தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிடும் உரிமையையும் வாங்கி இருக்கிறார். கேரளா மாநிலத்தில் கோகுலம் மூவிஸ் நிறுவனம் மூலமாக அந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்.

அதே போல் கர்நாடகா மாநிலத்தில் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் மூலமாக குட் பேட் அக்லி படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார். இந்த நிறுவனம்தான் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தை தயாரித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதற்கிடையே கர்நாடாவைச் சேர்ந்த மற்றொரு சினிமா வினியோகஸ்தர் தரப்பில் சிங்கிள் பேமேண்ட் தருவதாக ஒரு பெரிய ஆபர் தந்திருக்கின்றனர்.

ஆனால் அந்த நிறுவனத்துக்கு குட் பேட் அக்லி படத்தின் தியேட்டர் உரிமையை தராமல், தயாரிப்பாளர் ராகுல் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு தந்திருக்கிறார். அதுவும் ப்ரீ டிஸ்டிரிபூசன் என்ற முறையில் ஒரு ரூபாய் கூட பணமும் வாங்காமல் அந்த உரிமையை அந்த நிறுவனத்துக்கு ராகுல் தந்திருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தமாக பணம் தரும் நிறுவனத்தை மறுத்துவிட்டு கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு பணமே வாங்காமல் தியேட்டர் வெளியீடு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் தருவதற்கான பின்னணி காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது அஜீத்குமார் நடித்த படத்தை இப்படி கொடுத்தால், கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கும் விஜய் படம் ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வாங்கலாம் என்ற திட்டத்தில் ராகுல் செயல்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு வெளியான விஜய் நடித்த தி கோட் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்தான். அதன் மூலம் ரூ. 100 கோடி வரை ஷேர் கிடைத்த நிலையில், ஜனநாயகன் படத்தையும் அதே போல் ரிலீஸ் செய்தால் கணிசமான லாபம் அள்ளலாம் என்ற திட்டத்தில் இப்படி பண்டமாற்று முறையில் அஜீத்குமார் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்