- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லிக்காக ஹைதராபாத் சென்றும் அந்த பழக்கத்தை மட்டும் விடாத அஜித்... இணையத்தில் வைரலாகும்...

குட் பேட் அக்லிக்காக ஹைதராபாத் சென்றும் அந்த பழக்கத்தை மட்டும் விடாத அஜித்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படம் அடுத்த கட்ட படப்பிடிப்பு திடீரென தாமதமானதால், தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் அஜித் குமார். இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

 

- Advertisement -

இதில் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய் இது வசூலித்த காரணம் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும் ஆதிக் ரவிச்சந்திரனின் திறமையான திரைக்கதையும் தான். டைம் ட்ராவல் கான்செப்ட் மையப்படுத்தி கதை எழுதிய ஆதிக், தான் சொல்ல வந்த விஷயத்தை எந்தவித குழப்பமும் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்தளித்து இருந்தார்.

 

- Advertisement -

இப்படியான சூழலில் தான் அவர் அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவர் தீவிர அஜித் ரசிகர் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. படத்திற்கு குட் பேட் அக்லி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சமீபத்தில் வெளியான போஸ்டர் பலரது எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. அதில் மூன்று கேரக்டர்களில் அஜித் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கலர் கலரான சட்டை, கையில் டாட்டூ என ஒரு ஆரவாரமான அஜித்தை அதில் பார்க்க முடிந்தது.

 

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. தீனா படத்திலிருந்து போலவே, இடது காதில் கடுக்கன் அணிந்து கொண்டு இந்த திரைப்படத்தில் அஜித் நடிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இப்போதைக்கு ஜூன் முதல் வாரம் வரை இதன் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

 

பிறகு ரஷ்யா செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சூட்டிங் முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் பைக்கில் டிராவல் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. பைக் டூரில் எப்போதும் ஆர்வமிக்க அவர், இந்த ஊரை ஹெல்மெட் அணிந்து கொண்டு ஹைதராபாத் வீதிகளை வலம் வந்திருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தற்போது இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

 

https://x.com/Chrissuccess/status/1795293720641991021?t=WuDj6LLqrblCN5HNgxPQQA&s=19

- Advertisement -

சற்று முன்