- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா... ஒரு வழியா நம்ம ஏகே பைக்க ஓரமா நிப்பாட்டிட்டு, ஷூட்டிங் போக ஒத்துக்கிட்டாராம்......

அடேங்கப்பா… ஒரு வழியா நம்ம ஏகே பைக்க ஓரமா நிப்பாட்டிட்டு, ஷூட்டிங் போக ஒத்துக்கிட்டாராம்… விடாமுயற்சியின் கடைசி முயற்சி ஓகே ஆயிருச்சு போல!…

- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் இணைந்து நடித்த அஜித் குமார், அடுத்ததாக தீரன் பட இயக்குனர் எச் வினோத்தை பிடித்தார். இவருடனும் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களில் அஜித் பணியாற்றினார். ஒரே இயக்குனருடன் தொடர்ந்து பணிபுரியும் பாணியை அஜித் விரும்புவதாக சினிமா விமர்சகர்கள் பலரும் கூறினர். இந்நிலையில் துணிவு படத்தைத் தொடர்ந்து அவர் யாருடன் இணைய போகிறார் என கடந்த வருடமே கேள்வி எழுந்த நிலையில், அதற்கு எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவனிடமிருந்து பதில் வந்தது.

லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தான் பணியாற்ற இருப்பதாகவும், இதில் அஜித் குமார் ஹீரோவாக நடிப்பதாகவும் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கூறியிருந்தார். முதலில் இவர் இயக்குனரா என உச்சு கொட்டிய அஜித் ரசிகர்கள், நல்லவேளை நம்ம தல மீண்டும் சிறுத்தை சிவாவுடன் சேரவில்லை என தங்களை ஆறுதல் படுத்திக் கொண்டு கூட்டணியை வரவேற்றனர். ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலால் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு பறிபோனது.

- Advertisement -

இதனால் அஜித்தின் அடுத்த இயக்குனர் யார் என்ற கேள்விக்குறி பெரிதான நிலையில், சர்ப்ரைஸ் ஆக வந்து சேர்ந்தார் மகிழ் திருமேனி. தடையற தாக்க, தடம், மீகாமன் போன்ற திரில்லர் ஆக்சன் படங்களை எடுத்திருக்கும் மகிழ்திருமேனி, அஜித்துடன் இணைந்திருப்பதால் படம் நிச்சயமாக வித்தியாசமான முறையில் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் போல், அஜித்தின் வி சென்டிமென்ட்டை கைவிடாத படக்குழு, விடாமுயற்சி என தலைப்பு வைத்து ரசிகர்களை அதிருப்தி படுத்தியது.

அஜித் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பு வெளியானதோடு சரி. அதன் பிறகு படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால் மேலும் சங்கடத்திற்கு ஆளாகிறார்கள் ஏ கே ரசிகர்கள். ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த லியோ படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் முடிவடைய, விடாமுயற்சியின் வேலைகளோ இன்னும் தொடங்கிய பாடில்லை என்று சிலர் ஆதங்கப்பட்டனர். அதே சமயம் சூட்டிங் தொடங்கப்படாததற்கு அஜித்தான் காரணம் என்றும், படத்திற்கு ஓகே சொல்லிவிட்டு பைக்கில் அவர் ஊர் சுற்றுவதால் பணிகள் முடங்கிப் போய் இருப்பதாகவும் பேசப்பட்டது.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க மகிழ் திருமேனி கதை விவாதத்திற்காக மலேசியா பறந்து இருப்பதாகவும், முதற்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. விடாமுயற்சியின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், தள்ளிப் போகும் படப்பிடிப்பால் அவர் இதிலிருந்து வெளியேறி விட்டதாக ஒரு செய்தி வெளியானது. விடாமுயற்சி என தலைப்பு வைத்ததோடு சரி, படத்திற்கான எந்த முயற்சியும் இல்லை என இணையத்தில் விஜய் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர்.

இந்த சூழலில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் ஆஸ்தான படபிடிப்பு தளமான ஹைதராபாத்திலேயே இதன் சூட்டிங் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சற்று உற்சாகம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள், ஒரு வழியா நம்ம தல சூட்டிங் போறாருப்பா என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அதேசமயம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், எந்நேரமும் ஏகேவின் முடிவு மாறலாம் என்று சினிமா விமர்சகர்கள் குண்டை தூக்கி போட்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்