- Advertisement -
Homeபொழுதுபோக்குகாந்தா படம் ரிலீஸ் திடீரென தள்ளிப் போனது ஏன்? படத்தின் நாயகன் துல்கர் சல்மான்தான் அதற்கு...

காந்தா படம் ரிலீஸ் திடீரென தள்ளிப் போனது ஏன்? படத்தின் நாயகன் துல்கர் சல்மான்தான் அதற்கு காரணமா? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

மலையாள சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் சீனியர் நடிகர் மம்முட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு இந்தி என பிறமொழி படங்களிலும் துல்கர் சல்மான் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வரிஏய்ப்பு செய்து சொகுசு கார்களை கேரளாவில் கொண்டு வந்து விற்கப்பட்டதாக எழுந்த புகாரில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரது வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர். இதில் அவர்களது கார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் துல்கர் சல்மான் நடித்த காந்தா என்ற படம் இம்மாதம் 12ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென படக்குழு தரப்பில் இருந்து காந்தா படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டனர். அதனால் அந்த படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியவில்லை.

காந்தா படம் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகாமல் திடீரென இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கு காரணம் படத்தின் நாயகன் துல்கர் சல்மான்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவரது தயாரிப்பில் வெளிவந்த லோகா படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி வசூலை வாரி குவித்துக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

அதனால் இந்த நேரத்தில் காந்தா படம் வந்தால் லோகா படத்தின் வசூல் பாதிக்கப்படும். அல்லது லோகா படத்தின் அபார வெற்றியால் காந்தா படத்திற்கும் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என்பதால் காந்தா படத்தின் ரிலீஸ் இப்போதைக்கு வேண்டாம் என்று படத்தின் நாயகன் துல்கர் சல்மான்தான் இப்படி ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்த சூழலில் மற்றொரு புதிய தகவலாக காந்தா படம் இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் ஆகவில்லை. அவர்கள் எதிர்பார்த்த விலை இன்னும் கிடைக்கவில்லை. அதனால் டிஜிட்டல் ரைட்ஸ் கிடைத்த பிறகு காந்தா படம் புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. துல்கர் சல்மான் தொடர் வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கிறார். அவரது படமும் ஓடிடி ரைட்ஸ் வியாபாரம் இன்னும் ஆகவில்லையா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்