- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா நடித்த ரெட்ரோ படத்துக்கு போட்டியாக அஜீத்குமார் நடித்த அந்த படம் திரைக்கு வருகிறதா? -...

சூர்யா நடித்த ரெட்ரோ படத்துக்கு போட்டியாக அஜீத்குமார் நடித்த அந்த படம் திரைக்கு வருகிறதா? – அப்போ மே 1ம் தேதி கச்சேரி களை கட்டுமே…

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் படுமொக்கையாக இருந்ததால் பலத்த தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் சூர்யா மிக சிறப்பாக நடித்திருந்தும் கதை திரைக்கதை சொதப்பியதால் படம் பிளாப் ஆனது.

கங்குவா படத்துக்கு பின் சூர்யா நடித்த அவரது 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சமீபமாக நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே அறிமுகமானார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பிளாப் ஆனதால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பிறகு இந்தி தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து பிரபல நடிகையானார். இப்போது தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அவர் ஜனநாயகன் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து ரெட்ரோ காஞ்சனா 4 படங்களிலும் அவர் நடித்து வருவது கவனிக்கத்தக்கது.

வருகிற மே 1ம் தேதி ரெட்ரோ படம் ரிலீஸாக உள்ளது. முதன்முறையாக கார்த்திக் சுப்பராஜ் சூர்யா பூஜா ஹெக்டே காம்பினேஷனில் வெளியாகும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வேறு முக்கியமான புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருகிற மே 1ம் தேதி சூர்யா நடித்த ரெட்ரோ படம் ரிலீஸாகும் அதே நாளில் நடிகர் அஜீத்குமார் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டில் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது.

இப்போது 25 ஆண்டுகள் கழித்து வருகிற மே 1ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் அஜீத்குமார் மம்முட்டி ஐஸ்வர்யா ராய் தபு உள்ளிட்டோர் பிரதான கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை. இப்போதும் ரசிக்கக்கூடியவை. சூர்யா படம் வெளியாகும் அதே நாளில் அஜீத்குமார் நடித்த படமும் ரி ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்