- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்பாராததை எதிர்பாருங்கள்... வந்தாச்சு குட் பேட் அக்லி போஸ்டர்... ஒரு அஜித் இல்லை... மூணு அஜித்......

எதிர்பாராததை எதிர்பாருங்கள்… வந்தாச்சு குட் பேட் அக்லி போஸ்டர்… ஒரு அஜித் இல்லை… மூணு அஜித்… முக்கியமான அப்டேட் இதோ…

- Advertisement -

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தின் சூட்டிங் தற்போது, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அஜித்குமார். இதை அவரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

 

- Advertisement -

தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்திற்கு குட் பேட் அக்லி என டைட்டில் வைக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த ஆதிக் ரவிச்சந்திரன், அந்த சமயத்தில் அஜித்திடம் கதையை கூறி ஓகே வாங்கி இருக்கிறார்.

 

- Advertisement -

இருப்பினும் அவருக்கு முந்தைய திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்ததால், நிச்சயம் ஒரு வெற்றி படத்தை கொடுத்துவிட்டு அஜித் இயக்க வேண்டும் என்று முடிவோடு இருந்தார் ஆதிக். இதற்காக அவர் கையில் எடுத்த திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. விஷால் எஸ் ஜே சூர்யா ஆகியோரை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து அவர் இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார்.

 

டைம் டிராவல் கான்செப்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. அதிலும் இந்த படத்தின் திரைக்கதையை, அற்புதமாக எடுத்திருந்ததால் பாராட்டைப் பெற்றார் ஆதிக் ரவிச்சந்திரன். எஸ் ஜே சூர்யா வின் நடிப்பும், ஆதிக் ரவிச்சந்திரனின் அற்புதமான திரைக்கதை அமைப்பும் இந்த திரைப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது.

 

நினைத்தபடியே மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி அடைந்ததால், அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ஆதிக் ரவிச்சந்திரன். இதற்கான சூட்டிங் கடந்த வாரம், ஹைதராபாத்தில் தொடங்கியது. அதில் அஜித்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இப்படியான சூழலில் குட் பேட் அக்லியிலிருந்து முதல் போஸ்டரை பட குழு வெளியிட்டு இருக்கிறது. இதில் அஜித் மூன்று தோற்றங்களில் காட்சியளிக்கிறார். கலர் கலராக சட்டை, உடல் முழுவதும் டாட்டூ, கூலர்ஸ் என அவரது தோற்றமே படுமாஸாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் போஸ்டரிலையே, இந்தத் திரைப்படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்