- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியிலிருந்து வந்தாச்சு அடுத்த போஸ்டர்... என்ன எல்லாரும் நடுரோட்லயே நிக்கிறாங்க... அதுக்குத்தான் அஜர்பைஜான் போனாங்களா?...

விடாமுயற்சியிலிருந்து வந்தாச்சு அடுத்த போஸ்டர்… என்ன எல்லாரும் நடுரோட்லயே நிக்கிறாங்க… அதுக்குத்தான் அஜர்பைஜான் போனாங்களா?…

- Advertisement -

காணாமல் போன தனது மனைவியை தேடி கண்டுபிடிக்கும் கணவனின் கதை தான் விடா முயற்சி படத்தின் ஒன்லைன் என்று கூறப்படுகிறது. இதில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர்களுக்கு பிளாஷ்பேக் சீன்களையும் படத்தின் இயக்குனர் ஆன மகிழ்திருமேனி வைத்திருக்கிறார்.

 

- Advertisement -

அதன்படி அண்மையில் அஜித் மிக இளமையான தோற்றத்தில் திரிஷாவுடன் இருப்பது போன்ற விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்தப் படத்திற்கான அறிவிப்பு என்னவோ வெளியிடப்பட்டது கடந்த ஆண்டு மே மாதம் தான். லைக்கா நிறுவனம் இதனை தயாரிப்பதாக தெரிவித்தது.

 

- Advertisement -

ஆனால் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்குப் பிறகு அக்டோபரில் தான் தொடங்கியது. எடுத்ததுமே அஜர்பைஜான் நாட்டிற்கு படக்குழுவினர் சென்றனர். கிட்டத்தட்ட அங்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அண்மையில் அங்கு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இது தொடர்பான வீடியோவும் வெளியானது.

 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேதாளம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடலுக்கு இணையாக ஒரு டப்பாங்குத்து பாடல் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் நடு ரோட்டில் கையில் பேக்வுடன் அஜித் செல்வது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இதைப் பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஃபர்ஸ்ட் போஸ்டர் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்த்து இருந்ததாகவும் அவர்கள் கூறினர். இந்த நிலையில் அடுத்த வாரமே வெளியான செகண்ட் போஸ்டரில், ரசிகர்களை திருப்தி அளிக்கும் வகையில் புகைப்படங்கள் இருந்தன.

 

தற்போது அர்ஜுன் சம்பந்தமான போஸ்டர் வெளியாகி உள்ளது. இது அர்ஜுன் நடுரோட்டில் இருப்பது போலவே காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதனால் சாலையை மையப்படுத்தி தான் படத்தின் கதை இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். விடாமுயற்சி திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கி இருக்கிறது. இதேபோல் ஓ டி டி யில் ஒளிபரப்பும் உரிமத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

சற்று முன்