- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியில் ரீமேக்கான சூரரைப் போற்று... அக்ஷய் குமார் நடித்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்களா... முதல்...

இந்தியில் ரீமேக்கான சூரரைப் போற்று… அக்ஷய் குமார் நடித்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்களா… முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?…

- Advertisement -

தொடர் தோல்வி திரைப்படங்களையே கொடுத்து வந்த சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை சூரரை போற்று திரைப்படம் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக 2013ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்திற்கு பிறகு, சூர்யா வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

 

- Advertisement -

அஞ்சான், மாஸ் என்கிற மாசிலாமணி, பசங்க 2 என அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் போதுமான விமர்சனத்தை பெறவில்லை. 24 திரைப்படம் விமர்சன ரீதியாக நன்றாக இருந்தும், அதற்கு ரசிகர்கள் அந்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை.

 

- Advertisement -

பிறகு வெளியான சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என் ஜி கே, காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களும் சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை. இந்த சமயத்தில்தான் சுதா கொங்கராவுடன் சேர்ந்தார் சூர்யா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் சூரரைப் போற்று காவியமாக வெளியானது. 2020 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் இது வெளியிடப்பட்டது.

 

பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தைரியமாக ஓடிடியில் ரிலீஸ் செய்தார் சூர்யா. எதிர்பார்ப்பிற்கு மேலேயே இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. காட்சிக்கு காட்சி தனது அழுத்தமான நடிப்பை வெளிக்காட்டி அசர வைத்தார் சூர்யா. ஒவ்வொரு ஃபிரேமிலும், தனது நடிப்பை அவர் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தார்.

 

இதுபோக படத்தில் அபர்ணா பால முரளி, ஊர்வசி, பூ ராமு, கருணாஸ் ஆகியோரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அப்படி அனைத்துமே அதற்கு பிளஸ் ஆக இருந்ததால், 2020 ஆம் ஆண்டு சிறந்த படத்திற்கான தேசிய விருதை சூரரைப் போற்று பெற்றது. சூர்யாவும் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

 

இந்த நிலையில் ஹிந்தியில் இந்த திரைப்படம் ரீமேக் ஆக, அதில் அக்ஷய் குமார் நடித்தார். சர்பிரா என பெயர் வைக்கப்பட்ட நிலையில் சுதா கொங்கரா இயக்க, சூர்யா தயாரித்தார். இந்த திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் முதல் நாளில் வெறும் இரண்டரை கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. படம் நன்றாக இருக்கிறது என்று விமர்சனம் இருந்தாலும், அக்ஷய் குமாரின் முந்தைய திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்ததால், இந்த திரைப்படம் இன்னும் ரீச் ஆகவில்லை. இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல படத்திற்கு ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்