தமிழ் சினிமாவில் சில வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். அவரது இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றன. இப்போது ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜாலியோ ஜிம்கானா என்ற புதிய படம் வெளிவர இருக்கிறது.
இந்த படத்தில் பிரபுதேவா மடோனா செபாஸ்டின் அபிராமி ரோபோ சங்கர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற போலீஸ்காரன கட்டிகிட்டா… என்ற பாடல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜாலியோ ஜிம்கானா படம் வருகிற 22ம் தேதி வெளியாகிறது. டிரான்ஸ் இந்தியா மீடியா சார்பில் ராஜேந்திர ராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சில பாடல்களை படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய ஜெகன் கவின்ராஜ் எழுதியிருக்கிறார். அதில் போலீஸ்காரனை கட்டிக்கிட்டா… என்ற பாடலையும் அவர்தான் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே வேறு சில படங்களிலும் பாடல்கள் எழுதியவர். ஆனால் படத்தை தயாரித்த போது இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கும் ஜெகன் கவிராஜூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், படத்தில் அனைத்து பாடல்களையும் ஷக்தி சிதம்பரமே எழுதியதாக தனது பெயரை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஜாலியோ ஜிம்கானா படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அதில் பாடல்களுக்கு பெயர் குறித்த கேள்வி எழுந்ததும், அங்கிருந்த இயக்குனர் ஷக்தி சிதம்பரம் உடனடியாக அங்கிருந்து வேகமாக வெளியேறி சென்றுவிட்டார். இதையடுத்து பேசிய ஜெகன் கவிராஜ், ஒரு மலையாள படத்தில் வந்த பாடலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு போலீஸ்காரனை கட்டிக்கிட்டா… என்ற பாடலை நான் எழுதினேன். மேலும் இந்த படத்தில் 3 பாடல்களை நான் எழுதி இருக்கிறேன். மற்ற 4 பாடல்களை மட்டுமே ஷக்தி சிதம்பரம் எழுதினார்.
ஆனால் எல்லா பாடல்களையும் அவரே எழுதியதாக தன் பெயரை போட்டுக் கொண்டார். நான் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியதால் என்னால் படத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அது குறித்து நான் எதையும் கேட்டு கேட்கவில்லை. தயாரிப்பாளர் என்ன முடிவு செய்கிறாரே செய்கிறாரோ அதுதான் என் முடிவு என்று கூறினார்.
இதுகுறித்து பேசிய படத்தின் நாயகன் நடிகர் பிரபுதேவா, யார் செய்தாலும் தவறு தவறுதான், என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாக தெரியாது. ஆனால் இந்த பிரச்சனையை இந்த நிகழ்ச்சியில் பேசி இருக்க வேண்டியதில்லை தயாரிப்பாளர்களையும் இயக்குனரையோ நேரில் சந்தித்து பேசி இருக்கலாம் என்று தெரிவித்தார். வழக்கமாக சினிமாவில் கதையை தான் திருடுவார்கள். இப்போது பாடல்களையும் திருட ஆரம்பித்து விட்டார்களா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





