- Advertisement -
Homeபொழுதுபோக்குசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட படம், அல்லு அர்ஜூன் அட்லி சம்பளம் மட்டும் இவ்வளவு...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட படம், அல்லு அர்ஜூன் அட்லி சம்பளம் மட்டும் இவ்வளவு கோடிகளா? வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

புஷ்பா புஷ்பா 2 படங்களின் அபார வெற்றியை தொடர்ந்து இப்போது ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தை, இயக்குனர் அட்லி டைரக்ட் செய்கிறார். இது அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது 22வது படமாகும். இந்த படத்தை இயக்கும் அட்லிக்கு இது 6வது படமாகும். ராஜா ராணி தெறி மெர்சல் பிகில் ஜவான் படங்களை அடுத்து இந்த படத்தை அட்லி இயக்குகிறார்.

சில தினங்களுக்கு முன் இந்த புதிய படத்தின் அறிமுக வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் சன் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு தனித்தனி காரில் வந்து இறங்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் அட்லி ஆகியோர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை சந்தித்து பேசுகின்றனர்.

- Advertisement -

அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு விமானத்தில் செல்லும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் அட்லி அங்குள்ள புகழ்பெற்ற விஎப்எக்ஸ் நிறுவனத்தில் சென்று அங்கு சில தொழில்நுட்ப படப்பிடிப்புகளை மேற்கொள்கின்றனர். அங்குள்ள தொழில்நுட்ப வல்லுனர்களுடன் படம் குறித்து ஆலோசிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அறிவியல் புனைவு கதையாக 2 பாகங்களாக இருந்த படம் உருவாகிறது. மேலும் வருகிற 2027ம் ஆண்டில் ரிலீஸ் செய்கிற திட்டத்தில் படத்தை மிக பிரமாண்டமாக உருவாக்கவும் இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இயக்குனர் அட்லி இந்தியில் இயக்கிய ஜவான் படம் ரூ. 1150 கோடி வசூலித்திருக்கிறது. அதே போல் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் அல்லு அர்ஜூன், அட்லி கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படம் ரூ. 2000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 2010ம் ஆண்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் அட்லி. அவரே இன்று சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை டைரக்ட் செய்ய அட்லிக்கு சம்பளம் ரூ. 100 கோடியும், படத்தின் நாயகன் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனுக்கு ரூ. 250 கோடியும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இதுவரை சன் பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் இயக்குனர் இவர்களாக தான் இருக்க முடியும்.

- Advertisement -

சற்று முன்