- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படம் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வரப்போவது யார்? அமிதாப் பச்சன் இல்லையாம்...

வேட்டையன் படம் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வரப்போவது யார்? அமிதாப் பச்சன் இல்லையாம் – அடி பொலி, கொல மாஸ் சாரே…!

- Advertisement -

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை தசெ ஞானவேல் டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்துள்ளார். கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் நடித்துள்ளார்.

மேலும் வேட்டையன் படத்தில் ராணா டகுபதி, மஞ்சு வாரியார், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

- Advertisement -

இதில் நடிகர் ரஜினிகாந்த் குட்டி கதை சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏனெனில் நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி விரைவில் மாநாடு நடத்த இருக்கிறார். அதனால் ரஜினி அவர் குறித்து ஏதும் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை சமீப காலமாக தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இப்போது வேட்டையன் படத்தை முடித்துவிட்டு அடுத்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் தனராஜ் டைரக்ட் செய்கிறார். இதைத்தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தின் இயக்குனர்கள் குறித்த விவரங்கள் அடுத்த கட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இன்று மாலை நடக்கும் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவில் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாபச்சன் பங்கேற்பார் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால் இந்த விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளது. மேலும் மலையாள நடிகர் மோகன்லால் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் மோகன்லால் நடித்திருந்தார். அடுத்து ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார். அதனால் இந்த விழாவில் அவர் பங்கேற்கிறார். மேலும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்சன் தயாரிக்கும் லூசிபர் படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். அதனால் தனது நண்பர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளதாலும், லைகா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாலும், வேட்டையன் பட விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

சற்று முன்