இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இந்தி சினிமாவில் நடித்து வரும் முன்னணி சீனியர் நடிகராக இருக்கிறார். இன்னும் படங்களில் கவுரவத் தோற்றங்களில் அமிதா பச்சன் நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக விளம்பர படங்களில் மிக அதிகமாக நடிப்பவர் அமிதாபச்சன்.
இவரது மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது பேத்தி ஆராத்யா பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு பிடித்தமான நல்ல கேரக்டரை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதனால் இப்போதும் இவரது நடிப்பை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முதல் பாடல் மனசிலாயோ சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிளாக ஹண்டர் வாண்டர் என்ற பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இதற்கிடையே வேட்டையன் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் விதமாக படக்குழு தரப்பில் தொடர்ச்சியாக நடிகர்களின் அறிமுக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது தற்போது தமிழ் சினிமாவில் டிரண்டாகி வருகிறது. இதுவும் ஒரு பிரமோவாக படத்துக்கு அமைகிறது.
அந்த வகையில் வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள அந்த அறிமுக வீடியோவை தற்போது வெளியிட்டு, அவரது கேரக்டரை அறிமுகப்படுத்தி உள்ளனர். வீடியோவில் செம கெத்தாக மாஸ் காட்டி இருக்கும் அமிதாப்பச்சனை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர். இந்த வயதிலும் இவ்வளவு கெத்தாக, மாஸ் காட்டுகிறாரே, படத்தில் ரஜினியையே முந்தி விடுவாரோ என்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
வீடியோ:https://x.com/Trendswoodcom/status/1836765638016082375





