- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் டும்டும்டும் - மணப்பெண் அந்த பிரபலத்தின் மகள்தான், சீனியர் நடிகர் ஒய்ஜி...

இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் டும்டும்டும் – மணப்பெண் அந்த பிரபலத்தின் மகள்தான், சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சினிமா நட்சத்திரங்களுக்கு திருமணம் என்பது ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பரபரப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. திருமண வயது கடந்தும் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வருகின்றனர். அவர்களில் சிலர் திருமணமே வேண்டாம் என்று ஓபனாக கூறிவிட்டனர்.

அந்த வகையில் நடிகைகள் சித்தாரா கவுசல்யா கோவை சரளா போன்றவர்கள் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. அதே போல் நடிகர்களில் நட்டி நடராஜ் எஸ்ஜே சூர்யா போன்றவர்களும் திருமண வாழ்க்கையை தவிர்த்து விட்டனர். திரிஷா சிம்பு போன்றவர்களின் திருமணங்களும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன.

- Advertisement -

அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்துக்கு திருமணம் எப்போது என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். சில நடிகைகளுடனும் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர்கள் யாரையும் அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் இடையே காதல் இருப்பதாகவும் வெளிநாடுகளில் அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றித் திரிவதாகவும் புகைப்படங்களுடன் தகவல் வெளியாகி வைரல் ஆனது.

- Advertisement -

ஆனால் இதுகுறித்து இரண்டு தரப்பிலுமே எந்த விளக்கமும் தரவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் நெருங்கிய உறவினர் மற்றும் சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் சன் குழுமத்தில் முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். அந்த அணியின் உரிமையாளராக இருந்து அணியை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்