- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் டிரண்டிங் ஆன மோனிகா பாடல் - தனது இசையையே காப்பியடித்தாரா அனிருத்? கிளம்பியது...

கூலி படத்தில் டிரண்டிங் ஆன மோனிகா பாடல் – தனது இசையையே காப்பியடித்தாரா அனிருத்? கிளம்பியது சர்ச்சை!

- Advertisement -

பள்ளி வகுப்பறைகளில் தேர்வில் மாணவர்கள் காப்பியடித்ததாக புகார்கள் வருவது வழக்கம். ஆனால் வகுப்பறை காட்டிலும் இப்போது தமிழ் சினிமாவில் தான் காப்பியடிக்கும் புகார்கள் அதிகளவில் வருகின்றனர். கதையை. காட்சிகளை. படத்தின் டைட்டில்களை. இசையை காப்பியடித்தார்கள். இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என்ற நிலமைதான் எப்போதும் இந்த காப்பியடிக்கும் பிரச்னையில் நீடிக்கிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது.

- Advertisement -

கடந்த மாதம் கூலி படத்தில் இருந்து சிக்கிடு என்ற பாடல் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் சீனியர் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் இசையமைப்பாளர் அனிருத் சாண்டி மாஸ்டர் ஆகியோர் நடனமாடி இருந்தார்கள். இந்த பாடலை தொடர்ந்து தற்போது கூலி படத்தில் இருந்து மோனிகா என்ற பாடல் வெளியாகி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள இந்த பாடல் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் காட்சியில் மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் மற்றும் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்த பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீப காலமாக தமிழ் சினிமாவில் காப்பியடிக்கும் பிரச்னை மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. குறிப்பாக அனிருத் இசையமைக்கும் பாடல்கள் வெளியானதுமே ஏற்கனவே வெளியான ஹிட் பாடல்களை தழுவி காப்பியடித்து அவர் இசை அமைத்திருப்பதாக காப்பி அடித்து இருப்பதாக சர்ச்சை எழுந்து வருகிறது.

இந்நிலையில் கூலி படத்திலிருந்து வெளியான மோனிகா பாடல் ஏற்கனவே அனிருத் இசையமைத்த அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற சாவடீக்கா என்ற பாடலின் காப்பி என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த பாடலில் வரும் இசையும் டியூனும் சாவடீக்கா பாடல் போலவே இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதுவரை மற்றவர்களின் பாடலை, இசையை காப்பியடித்த அனிருத் இப்போது தன்னுடைய பாடலையே காப்பியடித்து மோனிகா பாடலை வெளியிட்டு இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்