நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் வணிக ரீதியாக வெற்றியை பெற்றாலும் கணிசமான லாபத்தை தந்தாலும் விமர்சன ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது. இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து விட்டது.
இதையவடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என திட்டமிட்டுள்ளனர். இதுதான் தமிழில் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் முதல் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 173 என டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
முதலில் இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அடுத்த சில நாட்களில் இந்த படத்தை விட்டு விலகுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும் வீடியோவுடன் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு அவரும் இந்த படத்தை இயக்கவில்லை என்று உறுதியானது.அதன்பிறகு ஓ மை கடவுளே டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குவார் என்றும் வெளியானது.
இப்போது அஸ்வத் மாரிமுத்துதான் ரஜினியின் 173வது படத்தை இயக்குகிறார் என்பது உறுதியாகிவிட்டது இந்த படத்தின் அதிகாரபூர்வ ஆரம்பம் இன்று சிறிய விழாவுடன் ஆரம்பமானது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த 173வது படத்திற்கு தர்மன் என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சிம்ரன் ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி லிங்குசாமி மற்றும் நடிகை சிம்ரன் ராஷிகண்ணா தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்கு அனிருத் இமையமைக்கிறார். இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தர்மதுரை என்ற படத்தில் நடித்திருந்தார் இப்போது அவரது 173 வது படத்துக்கு டைட்டில் தர்மன் என வைத்துள்ளனர். இதில் டாக்டர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது





