- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு 71 வயதாகி விட்டது, இருந்தாலும் நடிகை தமன்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் -...

எனக்கு 71 வயதாகி விட்டது, இருந்தாலும் நடிகை தமன்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் – சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர் நடிகை தமன்னா. வியாபாரி கல்லூரி சுறா அயன் பையா தோழா அரண்மனை 4 பாகுபலி பாகுபலி 2 ஜெயிலர் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இப்போது இந்தியிலும் முக்கிய நடிகையாக மாறியிருக்கிறார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக புருஷன் படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை தமன்னா இந்தி படங்களிலும் வெப் சீரிஸ் தொடர்களிலும் சமீபமாக அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் நகைக்கடை ஒன்றையும் அவர் சொந்தமாக திறந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமும் அதிகமாக தமன்னா ஆடுகிறார்.

- Advertisement -

சமீபத்தில் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்திரீ 2 படத்தில் தமன்னா, ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி இருந்தார். இந்த பாடல் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் அந்த பாடல் குறித்து பேசும் போது நடிகை தமன்னாவை பால் போன்ற மேனி கொண்டவர் என்று வர்ணித்து இருந்தார்.

இது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமன்னாவை அவர் உருவ கேலி செய்ததாக பலரும் விமர்சித்தனர். இதுகுறித்து அன்னு கபூர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும்போது, அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சிக்காக பாடல்களை தேர்வு செய்த போது, ஆஜ் கி ராத் பாடலில் தமன்னாவின் கடின உழைப்பையும் நடனத்தையும் பார்த்து வியந்தேன். அதை பாராட்டும் விதமாகவே அந்த கருத்தை சொன்னேன்.

- Advertisement -

ஒருவருடைய அழகை பாராட்டுவது என்பது வேறு. தவறான நோக்கத்தில் பார்ப்பது என்பது வேறு. தமன்னாவுக்கு இதில் வருத்தம் ஏதும் இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன். 71 வயதான நான் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயார். நான் இதே கருத்தை ஆங்கிலத்தில் மில்கி பாடி என்று சொல்லி இருந்தால் யாரும் இவ்வளவு பெரிய பிரச்சனையாக்கி இருக்க மாட்டார்கள்.

நான் இந்தியில் சொன்னதால் அது தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த விளக்கமும் மீண்டும் விவாதங்களை கிளப்பியுள்ளது. மொழியை தாண்டி ஒரு பெண்ணின் உடல் நிறத்தையும் பாகங்களையும் பொதுவெளியில் வர்ணிப்பது நாகரீகமா என்று கேட்டு நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் 71 வயதான அவர் தமன்னாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயார் என்று கூறியிருப்பதும் பலரை பரிதாபமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்