- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர்கள் பங்கேற்காத இளையராஜா பாராட்டு விழா… என்ன நடந்தது? இசைஞானி தரப்பில் வெளியான விளக்கம்!

இசையமைப்பாளர்கள் பங்கேற்காத இளையராஜா பாராட்டு விழா… என்ன நடந்தது? இசைஞானி தரப்பில் வெளியான விளக்கம்!

- Advertisement -

தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 13ம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், எல்லைகளை கடந்து தன் இசையால் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் இளையராஜா. இனி தமிழக அரசு சார்பில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும். மத்திய அரசு இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் விழாவில் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோரும் இளையராஜா குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர். அப்போது கமல்ஹாசன் ஒரு பாடல் பாடி இளையராஜாவை பெருமைப்படுத்தினார். இந்த விழாவில் இளையராஜாவின் இசை கச்சேரியும் சிம்பொனி அரங்கேற்றமும் நடந்தது.

இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி இசையமைப்பாளர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், மகன்கள் கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். அவர்கள் இசையமைப்பாளர்களாக இருந்தாலும் இளையராஜாவின் குடும்பம் சார்ந்தவர்களாக இருந்தார்கள்.

இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் மற்ற இசையமைப்பாளர்களுக்கு ஏன் அழைப்பில்லை? இது தமிழக அரசு நடத்தும் ஒரு பொதுவிழாவாக இருக்கும் போது ஏஆர் ரகுமான் அனிருத் ஜீவி பிரகாஷ்குமார் டி இமான் தமன் விஜய் ஆண்டனி தேவி ஸ்ரீ பிரசாத் என இசையமைப்பாளர்களும் கலந்துக்கொண்டு வாழ்த்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இந்த விழாவில் மற்ற இசையமைப்பாளர்கள் பங்கேற்ற இளையராஜா தரப்பில் இருந்து அழைப்பிதழ் அனுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிய வந்துள்ளது. இசைத்துறை சார்ந்த மற்ற இசையமைப்பாளர்கள் முன்னிலையில் தன்னை பிரபலங்கள் புகழ்வதை இசைஞானி தவிர்க்க நினைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் மற்றவர்களையும் அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

சற்று முன்