இந்திய சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ ஆர் ரகுமான். மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில், ஸ்லம்டாக் மில்லினர் என்னும் ஹிந்தி திரைப்படத்தில் இசையமைப்பதற்காக ஆஸ்கர் விருதை வென்று ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்தார் ரஹ்மான்.
காலம் கடந்து இன்றைய தலைமுறைக்கும் பிடிக்கும் வகையில் அவர், ரசிகர்களின் செவிகளுக்கு தேனூட்டும் பாடல்களை கொடுத்து வருகிறார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் பத்து தல திரைப்படத்தில் இடம் பெற்ற நீ சிங்கம் தான் பாடலை கூறலாம். பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்த இந்த திரைப்பட பாடல், கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் ஃபேவரட் ஆனது.
தொடர்ந்து தன்னை பிசியாகவே வைத்திருக்கும் ஏ ஆர் ரகுமான், தற்போது தக் லைப் திரைப்படத்தில் இசையமைத்து முடித்திருக்கிறார். படத்தின் பின்னணி இசை மிகத் தரமாக வந்திருப்பது அதன் ட்ரைலரை பார்க்கும்போதே தெரிவதாக பலரும் கூறினர். முன்னோட்டம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அவர் இசையில் கலக்கி இருந்தார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா பாடலும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. பலரும் தங்கள் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில், ஜிங்குச்சா பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். தற்போது அந்த திரைப்படத்திலிருந்து சுகர் பேபி என்னும் பாடலும் வெளியாக இருக்கிறது.
இதன் இசை வெளியீட்டு விழா வரும் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெறுகிறது. சூர்யாவின் 45 வது திரைப்படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த ப்ராஜெக்ட் இருந்து விலகினார் ரஹ்மான். இந்த நிலையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உடன் சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.
சமூக வலைதளத்தில் அவரை பலரும் பெரிய பாய் என்று அழைத்து வருகின்றனர். இது குறித்து திவ்யதர்ஷினி ரஹ்மானிடம் கேட்டார். உங்களுக்கு வலைதளத்தில் நிக் நேம் இருக்கிறது என்று சொல்லி பெரிய பாய் பெயரை அறிமுகப்படுத்தினார். இதற்கு ஏ ஆர் ரகுமான் என்ன பெரிய பாய், சின்ன பாய் என்று… நான் என்ன கசாப்பு கடை காரனா. எனக்கு அது பிடிக்கவில்லை என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்து விட்டார்.





