- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் கேரியரையே காலி பண்ண பாக்கறாங்களா? நடிகர் சிம்பு ஆவேசம் - சட்ட ரீதியாக பிரச்னைகளை...

என் கேரியரையே காலி பண்ண பாக்கறாங்களா? நடிகர் சிம்பு ஆவேசம் – சட்ட ரீதியாக பிரச்னைகளை சந்திக்க முடிவு!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் அரசன். இந்த படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில், 2வது ஷெட்யூல் ஷூட்டிங் சென்னையில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி எடுத்த அதிரடி நடவடிக்கையால் பெப்ஸி தொழிலாளர்கள் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் பங்கேற்ற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது.

- Advertisement -

இந்த சூழலுக்கு காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்று ஒரு தரப்பும், நடிகர் சிம்புதான் காரணம் என்று மற்றொரு தரப்பும் கூறிவருகிறது. அதாவது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்கனவே கொடுத்த 5 கோடி ரூபாய் அட்வான்ஸ் பணத்தை நடிகர் சிம்பு பல ஆண்டுகளாக திருப்பித் தரவில்லை.

கடைசியில் 5 கோடி ரூபாய் திருப்பித் தருவதாக கூறிய சிம்பு, இப்போது 3 கோடி ரூபாய்தான் தருவேன் என்று கூறியதால் ஐசரி கணேஷ் பயங்கரமாக கடுப்பாகி இருக்கிறார். அவர் 12.5 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கூறிய நிலையில் இப்படி 3 கோடி ரூபாய் மட்டுமே சிம்பு தருவதாக கூறியதால் அவர் உச்சகட்ட அதிருப்தி அடைந்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே அரசன் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் ஐசரி கணேஷிடம் சமாதானம் பேசிய நிலையில் அதுவும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த சூழலில்தான் ஆர்கே செல்வமணி மூலமாக அரசன் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த விடாமல் ஐசரி கணேஷ் தடுத்திருக்கிறார். மேலும் சிம்பு இப்போது விளம்பர படங்களிலும் இதனால் நடிக்க முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த சூழலில் நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தியிடம் இந்த பிரச்னையை சிம்பு கொண்டு சென்றிருக்கிறார். அவர்களும் இதுகுறித்து விசாரிக்க ஐசரி கணேஷ் மேலும் கடுப்பாகி இருக்கிறார். ஏனென்றால் நடிகர் சங்க தேர்தலில் ஐசரி கணேஷூக்கு எதிராக நின்று ஜெயித்தவர்கள் விஷால் கார்த்தி அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனது கேரியரையே காலி பண்ண ஐசரி கணேஷ் தரப்பு முயற்சிப்பதால் சட்ட ரீதியாக பிரச்னைகளை எதிர்கொள்ள விரைவில் சிம்பு கோர்ட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்