- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவுடன் மோத தயாரான பிரபல ஹீரோ, சம்பளம் தான் தாறுமாறாக...

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவுடன் மோத தயாரான பிரபல ஹீரோ, சம்பளம் தான் தாறுமாறாக கேட்கிறாரே? – நீடிக்குது இழுபறி!

- Advertisement -

நடிகை நயன்தாரா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மூக்குத்தி அம்மன். கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நாயகனாக ஆர்ஜே பாலாஜி நடித்து டைரக்‌ஷனும் செய்திருந்தார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்து இருந்தார். படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். ஊர்வசி மௌலி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. வருகிற மார்ச் 6ம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் இந்த படத்தின் பட பூஜை துவங்க உள்ளது. இதற்காக அங்கு 15 அடி உயரத்தில் அம்மன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

படத்தின் துவக்க விழா மற்றும் பட பூஜையில் ஆன்மிக பேச்சாளர்கள், சாமியார்கள், மடாதிபதிகள் மற்றும் ஆன்மீக பாடகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். அங்கு அன்னதானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் படத்தின் பிரமோ ஷூட்டிங் நடக்கிறது. இதில் ஒரு நாள் நடிகை நயன்தாராவும் பங்கேற்கிறார்.

இதையடுத்து வருகிற மார்ச் 15ம் தேதி முதல் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதில் ஒரு மாதம் நடிகை நயன்தாரா பங்கேற்க உள்ளார். அதன்பிறகு அவர் மலையாளம் மற்றும் மற்ற படங்களில் நடிக்க சென்று விடுகிறார். அதே நேரத்தில் இந்த படத்தை ஜூலை மாதத்துக்குள் எடுத்து முடித்து விட இயக்குனர் சுந்தர் சி திட்டமிட்டுள்ளார்.

மூக்குத்தி அம்மன் 2 படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது. இதில் சுந்தர் சி சம்பளம் மட்டுமே ரூ. 20 கோடி, நயன்தாராவின் சம்பளம் ரூ. 10 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் நடிக்க நடிகர் அருண் விஜயிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே அஜீத்குமாருடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இனி ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தனுஷின் இட்லிகடை படத்திலும் அருண் விஜய்தான் வில்லனாக நடித்திருக்கிறார். இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்திலும் நடித்த வகையில் அருண் விஜய் இமேஜ் சற்று உயர்ந்திருக்கிறது.

அதனால் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அருண் விஜய், அதிக சம்பளம் கேட்டுள்ளார். ஏனெனில் அவர் ஹீரோவுக்கு வில்லனாக நடிக்காமல் நடிகை நயன்தாராவிடம் வில்லனாக நடிக்க உள்ளார். அதனால் நாயகியிடம் தோற்கும் ஒரு வில்லனாக அருண் விஜய் நடிக்க அதிக சம்பளம் கேட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. எனினும் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

சற்று முன்