- Advertisement -
Homeபொழுதுபோக்குவணங்கான் படத்தில் நடித்தது குறித்து மனம் நெகிழ்ந்த நடிகர் அருண் விஜய்… இயக்குனர் பாலாவுக்கு அவர்...

வணங்கான் படத்தில் நடித்தது குறித்து மனம் நெகிழ்ந்த நடிகர் அருண் விஜய்… இயக்குனர் பாலாவுக்கு அவர் நன்றி சொன்ன விதம் – ரொம்பவும் ஃபீல் பண்ணிட்டாரோ…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் விஜய்குமார். எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத்குமார் என 3 தலைமுறைகளை கடந்த மூத்த நடிகர். விஜயகுமாருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு, 2வது மனைவி நடிகை மஞ்சுளா. இதில் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகன்தான் நடிகர் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அருண் விஜய், இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் வாய் பேசாத கேரக்டரில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இந்த கேரக்டரில் முதலில் நடிகர் சூர்யா நடித்த நிலையில், அவர் திடீரென படத்தில் இருந்து விலகியதால் பிறகு அந்த கேரக்டரில் அருண் விஜய் நடித்தார்.

- Advertisement -

வணங்கான் படத்தில் நடித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் டைரக்டர் பாலாவுக்கு ஒரு பதிவை நடிகர் அருண் விஜய் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும் என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரை உலகில் கால் பதித்த காலத்திலிருந்து உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களை கண்டு வியந்து நேசித்த ஒரு நடிகனாக இருந்திருக்கிறேன்.

எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியவனுக்கு தங்கள் இயக்கத்தில் பணியாற்ற வணங்கான் படத்தின் மூலம் வாய்ப்பளித்ததற்கு மனமார்ந்த நன்றிகள். நான் படப்பிடிப்பின் போது கூட இக்கதையின் பாதிப்பை முழுமையாக உணரவில்லை.

- Advertisement -

ஆனால் அதனை இப்போது வெள்ளித்திரையில் காணும்போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்த உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில் வணங்கான் ஒரு மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் எனக்கு துளியளவும் சந்தேகமில்லை.

இந்தப் படைப்பின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து பக்கபலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இந்த படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உங்கள் அருண் விஜய் என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்