- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் தமன்னாவுக்கு டும் டும் டும்... காதலன் விஜய்யை கரம் பிடிப்பதால் ஒரே கொண்டாட்டம்தான்....

விரைவில் தமன்னாவுக்கு டும் டும் டும்… காதலன் விஜய்யை கரம் பிடிப்பதால் ஒரே கொண்டாட்டம்தான்….

- Advertisement -

சினிமா உலகில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழி படங்களில் கலக்கி வருபவர் நடிகை தமன்னா. மும்பையைச் சேர்ந்த அவர், 2006ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்த ஆண்டே பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படத்தில் நடித்து பலரையும் கவனிக்க வைத்தார் தமன்னா. ஷோபனா என்னும் கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவியாகவும், தன்னுடன் படிக்கும் நண்பனை காதலித்து அதை சொல்ல முடியாமல் அவஸ்தைப்படும் கேரக்டரில் நேர்த்தியாக நடித்தும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் குடி புகுந்தார்.

தொடர்ந்து படிக்காதவன் படத்தில் தனுசுடன் ஜோடி சேர்ந்த அவர், அயன் திரைப்படத்தில் சூர்யாவுடன் டூயட் பாடினார். அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆனதால், தமிழ் சினிமாவில் தமன்னாவுக்கான மார்க்கெட் உயர்ந்தது. ஆனந்த தாண்டவத்திற்கு பிறகு, தமன்னா நடிப்பில் வெளியான கண்டேன் காதலை திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த அவர், முதல் பாதியில் தேனிக்கார பெண்ணாக கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் சோகத்தை முகத்தில் ஒளித்து வைத்து ஜனரஞ்சக நடிப்பையும் வெளிப்படுத்தினார்.

- Advertisement -

கண்டேன் காதலை திரைப்படத்திற்கு பிறகு தமன்னாவுக்கு மிகப்பெரிய பிளாட்பார்ம் ஆக அமைந்தது பையா திரைப்படம்தான். முதலில் நயன்தாராவுக்கு சென்ற அந்த கதை, பல்வேறு பிரச்சனைகளால் தடம் மாறி தமன்னா பக்கம் சென்றது. இந்தப் படத்தின் மூலம் தமன்னாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது.

பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்திய தமன்னா, தமிழில் விஜய் உடன் இணைந்து சுறா எனும் திரைப்படத்தில் நடித்தார். படுதோல்வியை அடைந்த இந்த படம், கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் சில காலம் தமிழ் திரைப்படப் பக்கம் வராமல் இருந்த நடிகையை, சிறுத்தை சிவா அழைத்து வர வீரம் திரைப்படத்திற்காக அஜித்துடன் ஜோடி சேர்ந்தார் தமன்னா.

- Advertisement -

இதையடுத்து பிறமொழி படங்களிலேயே நடிப்பதில் கவனம் செலுத்திய நடிகை தமன்னா, அவ்வபோது அத்தி பூத்தார் போல் தமிழ் படங்களுக்கும் வந்து செல்கிறார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தேவி, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் நடித்த தமன்னா, தர்மதுரையில் நடித்து தனது இருப்பை தக்க வைத்தார். தற்போது ஜெயிலரில் ரஜினிகாந்த் உடன் நடித்திருக்கிறார். சமீபத்தில் அந்த படத்தில் இருந்து வெளியான நூ காவாலயா பாடலில் நடிகையின் எடுப்பான நடன அசைவுகளால் சொக்கிப் போன ரசிகர்கள், பாடலுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அதனை நடிகை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் வந்த ‘லஸ்ட் ஸ்டோரிஸ்-2’ படத்தில் தமன்னா-விஜய் வர்மா நடித்த நெருக்கமான காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தமன்னாவின் வருங்கால மாமியாரை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாராம். இதனைத் தனது நண்பர்களிடம் நடிகை பெருமையாக பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் தமன்னா விஜய் வர்மா திருமண செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்