- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து நெருக்கடி தரும் மலேசியா போலீஸ் - கெடுபிடிகளால் அப்செட் ஆன நடிகர் விஜய் -...

தொடர்ந்து நெருக்கடி தரும் மலேசியா போலீஸ் – கெடுபிடிகளால் அப்செட் ஆன நடிகர் விஜய் – தமிழக காவல் துறையை இவங்க முந்திட்டாங்களே?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது விஜயின் கடைசி படமாகவும் உள்ளது. நிச்சயமாக இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றால்தான் சினிமாவில் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்த பெருமையை விஜய் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

ஒருவேளை இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றால் அதனால் விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார் என திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் இழிவாக விமர்சிக்கும் சூழல் உருவாகும். அதே நேரத்தில் பல விதங்களில் திமுக, ஜனநாயகன் படத்துக்கு நெருக்கடிகளை தந்தும் வருகிறது.

திமுக ஒரு தீயசக்தி என்று கோஷமிட்ட தவெக தலைவர் விஜய்க்கும் ஆளுங்கட்சி திமுகவுக்கும் கடுமையான மோதல் இப்போது உச்சக்கட்டத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே விஜய் நடித்த லியோ தி கோட் போன்ற படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை நடத்த திமுக தரப்பில் தந்த அழுத்தத்தால் அந்த படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே நடத்தவில்லை.

அதனால்தான் இப்போது விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக நடத்த படக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் நடிகர் விஜய், அரசியல் சார்ந்த கருத்துகள் எதுவும் பேசக்கூடாது என்று ஏற்கனவே மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளது.

இப்போது மேலும் பல புதிய தடைகளை, நிபந்தனைகள் என்ற பெயரில் கெடுபிடிகளை மலேசிய போலீஸ் விதித்துள்ளது. அதாவது இந்த விழாவில் கலந்துக்கொள்ள வருபவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, அரசியல் சார்ந்த பதாகைகள், கட்சி சின்னம் பொறித்த தொப்பிகள் கடிகாரங்கள் பெல்ட்டுகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட எதையும் நிகழ்ச்சி திடலுக்குள் கொண்டு வரக் கூடாது என மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளது.

மேலும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் பொருட்களை விழா அரங்க பகுதிக்குள் கொண்டுவரக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். தவெக கட்சி கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இடம் பெற்றுள்ளனதால் இப்படி ஒரு தடை செய்யப்பட்டுள்ளது. மலேசியா போலீசின் தொடரும் கெடுபிடிகளால் அப்செட் ஆன நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் பேசாமல் சென்னையிலேயே இசை வெளியீடு விழாவை நடத்தியிருக்கலாமோ என்று பேசி வருகின்றனர்.

சற்று முன்