- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லன்களாக மாறும் ஹீரோக்கள்…. சம்பளம் மட்டுமே குறிக்கோளா? ஜெயம் ரவி வரிசையில் அடுத்து அருண் விஜய்…...

வில்லன்களாக மாறும் ஹீரோக்கள்…. சம்பளம் மட்டுமே குறிக்கோளா? ஜெயம் ரவி வரிசையில் அடுத்து அருண் விஜய்… இட்லி கடை படத்தில் இவரது சம்பளம் எவ்ளோ தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஹீரோக்கள் வில்லன்களாக மாறுவது அதிகரித்து வருகிறது. எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நம்பியார், அசோகன், ஆர் சுந்தர்ராஜன், ஆர்எஸ் மனோகரன் போன்றவர்கள்தான் பெரும்பாலும் வில்லன்களாக இருப்பார்கள். அவர்களே சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருப்பார்கள்.

ஒருவேளை ஹீரோவே வில்லனாக நடிக்கும் கேரக்டராக இருந்தால் அதில் அப்பா, மகன் அல்லது அண்ணன் தம்பி என ஒரே நடிகரை 2 கேரக்டர்களில் கொண்டு வந்து அதில் ஒருவரை நல்லவராக ஒருவரை கெட்டவராக காட்டி விடுவர். அதே நேரத்தில் கடைசியில் அந்த கெட்டவன் கேரக்டரும் நல்லவராக மாறிவிடுவதாக காட்டி ஹீரோ இமேஜை காப்பாற்றி விடுவர்.

- Advertisement -

சமீபத்திலும் அதுபோன்றுதான் பெரிய ஹீரோக்கள் நடிக்கின்றனர். உதாரணமாக அழகிய தமிழ் மகன், தி கோட் படங்களில் அப்பா மகன் என 2 கேரக்டர்களில் ஒன்றில் விஜய் வில்லனாக நடித்தார். அமைதிப்படை படத்தில் சத்யராஜ் அப்பா மகன் என வில்லன், ஹீரோ கேரக்டரில் நடித்தார். ஆளவந்தான் படத்தில் கமலும் அண்ணன், தம்பி என 2 கேரக்டரில் ஒன்றில் வில்லனாக நடித்திருந்தார்.

ஆனால் இப்போது சில படங்களில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் போன்ற ஒரு சிலர் வில்லனாகவும் நடிக்கின்றனர், ஹீரோக்களாகவும் நடித்து ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகின்றனர். ஆனால் வில்லன் நடிகர்களே ஹீரோக்களாக இமேஜை காப்பாற்றிக்கொள்ள நினைக்கும்போது, ஹீரோக்கள் வில்லனாக நடிப்பதும் ரிஸ்க் எடுக்கிற ஒரு விஷயமாக தான் இருக்கிறது.

- Advertisement -

இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். அதே போல் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்திலும் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இவர் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் அருண் விஜய் ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜீத்குமாருக்கு விக்டர் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார்.

சூர்யா நடிக்கும் கங்குவா 2 படத்தில் அவரது தம்பி கார்த்தி தான் பிரதான வில்லனாக நடிப்பதாக தெரிகிறது. அதே போல் விக்ரம் 2 படத்திலும் கமலுக்கு வில்லனாக நடிக்க இருப்பதும் சூர்யா தான். இப்படி ஹீரோக்கள் வில்லன்களாக மாறினாலும் கணிசமான சம்பளம் பல கோடிகளில் கிடைக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் அருண் விஜய், இட்லி கடை படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 8 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்