- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா... இணையத்தில் வைரலாகும் தனுஷ் சிம்புவின் புகைப்படங்கள்... எஸ்கேவும் இதுல உள்ள...

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா… இணையத்தில் வைரலாகும் தனுஷ் சிம்புவின் புகைப்படங்கள்… எஸ்கேவும் இதுல உள்ள இருக்காரு…

- Advertisement -

ஒரு காலத்தில் எப்படி சர்ச்சைக்கு பெயர் போன நடிகராக சிம்பு இருந்தாரோ, தற்போது அந்த இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவரைப் பற்றி சமீப காலமாக வெளிவராத சர்ச்சைகளே இல்லை. குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் வழியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

 

- Advertisement -

நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடலாசிரியர், இயக்கம் என அவர் கலந்து கட்டி அடித்து வருகிறார். பவர் பாண்டி திரைப்படத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய இடைவேளை விட்டு அவர் எடுத்த ராயன் திரைப்படமும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

 

- Advertisement -

அதனைத் தொடர்ந்து, இட்லி கடை என்னும் திரைப்படத்தை அவர் இயக்கி நடித்து வருகிறார். இதுபோக, குபேரா படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படி தொடர்ந்து தனுஷ் பிசியாக இருந்து வரும் நிலையில், அவர் மீது பாடகி சுசித்ரா அடுக்கடுக்கான புகார்களை கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

 

இதுபோக நடிகை நயன்தாராவும் தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது கல்யாண டாக்குமெண்டரி வெளியாகாமல் தாமதமானதற்கு தனுஷ் தான் காரணம் என்றும், நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கான என் ஓ சி சான்றிதழை அவர் தரவில்லை என்றும் கூறியிருந்தார். கடவுள் உங்களைப் பார்த்துக் கொள்வார் என்றும் கடுமையாக அவர் பேசியிருந்தார்.

 

ஆனால் இதற்கு தனுஷ் எந்த பதிலும் கூறவில்லை. இப்படியான சூழலில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமண நிகழ்வில் தனுஷ் கலந்து கொண்டார். இதில் நயன்தாராவும் பங்கேற்க இருவரும் எதிரெதிர் திசையில் அமர்ந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனும் பங்கேற்றார். அப்போது அவரது மனைவியிடம் பேசிய தனுஷ், சிவகார்த்திகேயனை இன்முகத்துடன் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, சிம்பு இதில் பங்கேற்க, அவரும் தனுசும் இணைந்து கலகலப்பாக பேசிய புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. பொதுவாக தனுஷ் சிம்புவுடனும், சிவகார்த்திகேயன் உடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக பலரும் கூறி வந்தனர். ஆனால் அது அனைத்தும் வதந்தியே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்