- Advertisement -
Homeபொழுதுபோக்கு45வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நடிகர் ஆர்யா, பிறந்த நாளில் 40வது படத்தின் படப்பிடிப்பு...

45வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நடிகர் ஆர்யா, பிறந்த நாளில் 40வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – ஆர்யா 40 பட தயாரிப்பாளர் அவரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. ராஜா ராணி கலாபக் காதலன் சார்பட்டா பரம்பரை நான் கடவுள் காப்பான் பாஸ் என்கிற பாஸ்கரன் என பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். இப்போது நடிகர் ஆர்யா, இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஆர்யாவுடன் அட்டகத்தி தினேஷ் சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இயக்குனர் மனோ ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்ற ஆக்சன் படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் சரத்குமார் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் சார்பட்டா பரம்பரை 2ம் பாகம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த படத்திலும் நாயகனாக ஆர்யா தான் நடிக்கிறார். ஆனால் சார்பட்டா பரம்பரை தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நியைில் நேற்று ஆர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. நேற்று நடிகர் ஆர்யாவின் 45வது பிறந்த நாள் என்ற நிலையில், அவரது பிறந்த நாளில் அவரது திரை பயணத்தில் இந்த 40வது படம் பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

- Advertisement -

ஆர்யா 40 படத்தை மலையாள பட டைரக்டர் நிகில்முரளி டைரக்ட் செய்கிறார். இவர் கடந்த 2023ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான பிரண்யவிலாசம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா நடிப்பில் உருவாகும் இந்த 40வது படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அட்லி இயக்கத்தில் ஆர்யா நடித்த ராஜா ராணி படத்துக்கு இசையமைத்தவர் ஜீவி பிரகாஷ் குமார்தான்.

இப்போது ஆர்யா 40 படத்திற்கும் 2வது முறையாக ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷஷீம் இந்த படத்திற்கு கதை வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதையை எழுதி இருக்கிறார். இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா சொந்தமாக தயாரிக்கிறார்.

- Advertisement -

சற்று முன்