- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யின் மாஸ் ஹிட் ஆன படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் அட்லீ, அப்படின்னா தமிழ்நாட்டையே மறந்துட்டாரோ?

விஜய்யின் மாஸ் ஹிட் ஆன படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் அட்லீ, அப்படின்னா தமிழ்நாட்டையே மறந்துட்டாரோ?

- Advertisement -

அட்லீ தொடர்ந்து விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர். ஆனால் தற்போது பாலிவுட்டிற்கு சென்று ஷாருக்கானை வைத்து “ஜவான்” படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இதில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, தீபிகா படுகோன் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

அட்லீ தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக திகழ்ந்து வந்த நிலையில் பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று முடிவெடுத்துத்தான் தனது பாலிவுட் என்ட்ரியை கொடுத்திருக்கிறார். எனினும் “ஜவான்” திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வந்து விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை வைத்து பார்க்கும்போது அட்லீக்கு தமிழ் சினிமாவிற்கு திரும்பும் எண்ணமே இல்லையோ என்று தோன்றவைக்கிறது.

- Advertisement -

அதாவது அட்லீ விஜய்யை வைத்து இயக்கிய “தெறி” திரைப்படத்தை பாலிவுட்டில் அவரே ரீமேக் செய்யப்போகிறாராம். மேலும் அத்திரைப்படத்தை அவரே தயாரிக்கவும் போகிறாராம். இதில் விஜய்யின் ரோலில் பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் நடிக்க உள்ளாராம். அதே போல் சமந்தா ரோலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த தகவல் ஊர்ஜிதமானால் கீர்த்தி சுரேஷின் முதல் பாலிவுட் படமாக இது இருக்கும்.

“தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ள நிலையில் “தளபதி 69” திரைப்படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவரும் தகவலை பார்த்தால் அட்லீ கோலிவுட்டையே மறந்துவிடுவார் என்பதுபோல் தோன்றுகிறது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்