அட்லீ இயக்கத்தில் கடந்த ஏழாம் தேதி ஜவான் படம் வெளியானது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். வட மாநிலங்களில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க தமிழ்நாட்டிலோ கழுவி கழுவி ஊற்றுகிறார்கள் ரசிகர்கள். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட்தானாம்.
இருந்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போடுகிறது. இதுவரை உலகளவில் 690 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் ஜவான் டீம் ஹேப்பி அண்ணாச்சிதான். அதேசமயம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை. அதாவது ஒவ்வொரு சீனையும் ஒவ்வொரு படத்திலிருந்து அட்லீ உருவியிருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.
முக்கியமாக ரசிகர்கள் சிலர் எந்தெந்த படத்திலிருந்து சீன்கள் உருவப்பட்டது என லிஸ்ட்டே போட்டனர். இதன் காரணமாக அடுத்த படத்தை ஒரிஜினலாக உருவாக்கி பதிலடி கொடுக்க காத்திருக்கிறாராம் அட்லீ. சூழல் இப்படி இருக்க அவர் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி முதலில் விஜய் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் கொஞ்ச காலம் கழித்துதான் விஜய்யும், அட்லீயும் இணையவிருக்கிறார்களாம்.
அந்த கேப்பில் அல்லு அர்ஜுனை அட்லீ இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் அதுவும் இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றும் ஜவான் படத்துக்கு பாலிவுட்டில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் அட்லீ இயக்கத்தில் நடிக்க பாலிவுட் ஹீரோக்கள் ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி தெறி படத்தை வருண் தவானை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்ய வாய்ப்புகள் அதிகம் என்று பேச்சு எழுந்திருக்கிறது.
சூழல் இப்படி இருக்க தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜவான் படம் வணிக ரீதியாக வெற்றியடைந்திருப்பதால் மீண்டும் அட்லீக்கு கால்ஷீட் கொடுக்க ஷாருக் முடிவு செய்திருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியபோது ஷாருக்கிடம் அட்லீ கமல் ஹாசன் போன்ற ஒரு ஹீரோவையும் இதில் நடிக்க வைக்கலாம் என கூற அதற்கு ஷாருக்கும் இந்த ஐடியா நன்றாக இருக்கிறது. நானேகூட கமலிடம் பேசுகிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
கமலும் ஷாருக்கானும் ஏற்கனவே ஹேராம் படத்தில் இணைந்து நடித்தனர். அதுமட்டுமின்றி கமல் ஹாசன் இப்போது மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்கவும் தொடங்கியிருக்கிறார். கல்கி ஏடி 2898 படத்தில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அட்லீ – ஷாருக் அப்ரோச் செய்தால் கமல் அதில் நடித்தாலும் நடிக்கலாம் என கருதப்படுகிறது.





