- Advertisement -
Homeபொழுதுபோக்குஆட்டோகிராப் படம் ரி ரிலீஸ் குறித்த தகவல் - அதற்காக இவ்வளவு செலவு செய்தாரா...

ஆட்டோகிராப் படம் ரி ரிலீஸ் குறித்த தகவல் – அதற்காக இவ்வளவு செலவு செய்தாரா இயக்குனர் சேரன்? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். தொடர்ந்து பொற்காலம் இன்னொரு தேசிய கீதம் மாயக்கண்ணாடி தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். தங்கர்பச்சான் இயக்கத்தில் சொல்ல மறந்த கதை, கரு பழனியப்பன் இயக்கத்தில் பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்தார்.

சேரன் அவர் இயக்கிய பொற்காலம் தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் போன்ற படங்களில் அவரே நாயகனாகவும் நடித்திருந்தார். அதிலும் ஆட்டோகிராப் படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது. இதில் பள்ளி கல்லூரி கால காதலை மையப்படுத்திய கதைகளத்தில் படத்தை உருவாக்கி இருந்தார்.

- Advertisement -

ஆட்டோகிராப் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது பள்ளி கல்லூரி கால வாழ்க்கையை திரும்பி பார்த்து நினைவலைகளில் அசைபோடும் அளவுக்கு இந்த படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சினேகா கனிகா கோபிகா போன்றவர்களின் நடிப்பும் படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது.

இப்போது 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்டோகிராப் படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான டிரெய்லரை ஏஐ தொழில்நுட்த்தில் இயக்குனர் சேரன் உருவாக்கி உள்ளார். அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டு இருந்தார். ஏஐ தொழில்நுட்பத்தில் ஆட்டோகிராப் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அசந்து போய்விட்டனர்.

- Advertisement -

மலையாளத்தில் சமீபத்தில் ஒரு படத்தில் சேரன் நடித்திருந்தார். அந்த படத்திற்காக பெற்ற சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பெரிய தொகையை செலவழித்து தான் இந்த ஆட்டோகிராப் டிரெய்லரை ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருக்கிறார். மேலும் ஆட்டோகிராப் படத்திலும் சில தொழில்நுட்ப வசதிகளை பல லட்சம் செலவழித்து மேம்படுத்தி உயர்ரக தொழில் நுட்பத்தை கொண்டு வந்திருக்கிறார்.

அத்துடன் ஆட்டோகிராப் படத்தின் இசையை மீண்டும் இசையமைப்பாளர் சபேஷ் முரளி மூலம் ரீ ரெக்கார்டிங் செய்துள்ளார். இப்படி பல விதங்களில் தனது சம்பளத் தொகையை மொத்தமாக செலவு செய்து ஆட்டோகிராப் படத்தை சேரன் ரி ரிலீஸ் செய்கிறார். வருகிற மே மாதம் இந்த படம் திரைக்கு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்