- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜர்பைஜானில் உடனடியாக சூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்னை கிளம்பும் விடாமுயற்சி படக்குழு... என்ன காரணம் தெரியுமா?...

அஜர்பைஜானில் உடனடியாக சூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்னை கிளம்பும் விடாமுயற்சி படக்குழு… என்ன காரணம் தெரியுமா?…

- Advertisement -

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதமே வெளியானது. லைக்கா நிறுவனம் இதனை தயாரிப்பதாகவும், மகிழ் திருமேனி இதனை இயக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின்போதே படத்திற்கு விடா முயற்சி என்றும் டைட்டில் வைக்கப்பட்டது.

இதற்கு முன்பு, க்ரைம் திரில்லர் பாணி படங்களை மகிழ் திருமேனி இயக்கி இருந்ததால், அஜித் ரசிகர்கள் இந்த கூட்டணியை பெரிதும் நம்பி இருக்கின்றனர். தடையற தாக்க, தடம், மீகாமன், கலகத் தலைவன் என அவர் எடுத்த திரைப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. விடாமுயற்சி திரைப்படத்தையும் அவர் ரேசி ஆக்சன் திரில்லர் பாணியில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

மே மாதம் இதன் அறிவிப்பு வெளியான நிலையில் அக்டோபர் மாதம் தான் ஷூட்டிங் தொடங்கியது. இதில் அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் புகழ் ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களின் மூலமே, இவர்கள் நடிப்பது உறுதியாக இருக்கிறது. மற்றபடி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டிலேயே விடாமுயற்சி திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட அங்கு மட்டும் 90 சதவீத படப்பிடிப்பை நடத்த மகிழ்திருமேனி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அங்கு இரவு நேர ஹோட்டல்களில் அஜித், ஆரவ் ஆகியோர் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. அதுமட்டுமல்லாமல் அஜர்பைஜான் நாட்டின் இந்திய தூதரக அதிகாரியுடன் அஜித் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட மகிழ் திருமேனி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் தனது வேலைகளை தீவிரப்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் திடீரென அஜர்பைஜான் நாட்டிலிருந்து விடாமுயற்சி கிளம்ப முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு நிலவும் மோசமான காலநிலையை இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இனிமேலும் அஜர்பைஜானில் இருக்க முடியாது என்பதால், படக்குழு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாம். அதேசமயம், இன்னும் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனை எங்கு எடுப்பது என்பது தான் இப்பொழுது படக் குழுவின் ஒரே கேள்வியாக இருப்பதாகவும், அதற்கான இட தேர்வு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்