- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்பவுமே லோகேஷ் கனகராஜ் திருந்த மாட்டார், அவருக்கு இது மட்டும்தான் கண்ணுக்கு தெரியும், இப்படி ஒரு...

எப்பவுமே லோகேஷ் கனகராஜ் திருந்த மாட்டார், அவருக்கு இது மட்டும்தான் கண்ணுக்கு தெரியும், இப்படி ஒரு விமர்சனத்தில் சிக்கிட்டாரே டைரக்டர் – இதெல்லாம் தேவையா ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக லோகேஷ் கனகராஜ் மதிக்கப்பட்டாலும் அவரது மாநகரம் திருப்திப்படுத்திய அளவுக்கு, அவர் இயக்கிய மற்ற படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப் படுத்தவில்லை. குறிப்பாக அவரது படங்கள் வன்முறை களங்களாக மட்டுமே இருந்து வருகின்றன.

குறிப்பாக கைதி படத்தில், கதாநாயகி இல்லை, படத்தில் பாடல்கள் இல்லாத நிலையில் படம் முழுக்க சண்டை காட்சிகள் மட்டுமே பிரதானமாக இருந்தது. 57 இரவுகள் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த படத்தில், பகலில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெறும் அரை மணி நேரம் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விக்ரம் படத்திலும், ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறை காட்சிகள்தான் பிரதானமாக இருந்திருக்கின்றன. லியோ படமும் ரத்தமும், துப்பாக்கி சத்தமும், ஆக்‌சன் ஆக்சன் என படத்தில் பெரும்பகுதி வரை விஜய் சண்டையே போட்டுக்கொண்டு இருப்பார். மீதி காட்சிகளில் லியோ நான் இல்லை என்று மறுத்துக்கொண்டு இருந்தார். குறிப்பாக இடைவேளைக்கு பிறகு டப்பிங் தெலுங்கு படம் பார்க்கும் உணர்வையே தந்தது.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஐந்து படங்களிலும் இதுவரை கதையில் மையப் பொருளாக இருப்பது போதை பொருட்கள் கடத்தல் மற்றும் போதை பொருட்கள் பயன்பாடுதான். எந்நேரமும் கதாநாயகன் போதையில் இருப்பதை இவரது படங்களில் காண முடியும். உதாரணமாக விக்ரம், மாஸ்டர் படங்களில் ஹீரோக்களை பயங்கர குடிகாரன்களாக காட்டியிருப்பார்.

- Advertisement -

இயக்குநர் லோகேஷ் போதை இல்லாத சமுதாயம் தான் எனது நோக்கம் என்கிறார். முதலில் இவரால் போதை பொருள் இல்லாத படமே எடுக்க முடியாத போது போதை பொருள் இல்லாத சமுதாயத்தை இவர் எப்படி உருவாக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. உறியடி விஜயகுமார் நடித்த, அப்பாஸ் ரகமது என்பவர் இயக்கிய பைட் கிளப் என்ற படம் இன்று வெளியானது. இதை தயாரித்தது லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம்தான்.

இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தயாரித்த இந்த படத்தில் கஞ்சா விற்பனை, கஞ்சா பொட்டலங்கள் விநியோகம், கஞ்சா புகைப்பது என படம் முழுக்க புகை மண்டலமாக காட்சி தருகிறது. இதுபோன்ற தரம்கெட்ட படங்கள் தமிழ் சினிமாவுக்கு அவசியமில்லை. அதுவும் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள், போதை நிறைந்த ஒரு உலகத்தை தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தொடர்ந்து காட்டுகிறார்கள். இவர்கள் டிரக் ப்ரீ சொசைட்டி என்று கூறாமல், படம் எடுக்காமல் இருந்தாலே, பாதி பேருக்கு போதை அவசியமில்லாத ஒன்றாக மாறிவிடும். போதை என்பதை விட்டு லோகேஷ் கனகராஜை முதலில் மீட்க வேண்டும் என்பதுதான் படம் பார்த்த ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்