- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்திக் சுப்பராஜ் இயக்கிய டோரதி படம், மலேசியாவில் வெளியிட தடை - சென்சார் போர்டு அனுமதி...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய டோரதி படம், மலேசியாவில் வெளியிட தடை – சென்சார் போர்டு அனுமதி மறுக்க காரணம் இதுதான்!

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அவர் இயக்கிய ஜிகர்தண்டா இறைவி பேட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்போது அவரது கதை மற்றும் இயக்கத்தில் டோரதி என்ற படம் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 10வது படமாகும். இந்த படத்தில் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மொத ராத்திரி படம் பெரிய வெற்றியை பெற்று இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. தொடர்ந்து அவர் நடித்த 2வது படமும் திரைக்கு வந்துள்ளது.

- Advertisement -

பேட்ட படத்தில் நடிகர் சசிக்குமாரின் மகனாக நடித்த சனந்த் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராக பணி செய்திருக்கிறார். மேலும் டோரதி படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

டொராண்டோ திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி படம் போல இந்த படமும் வித்யாசமான கதைக்களத்தில் உருவான ஒரு படம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மலேசியாவில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தை மலேசியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மலேசிய திரைப்பட தணிக்கைக் குழுவின் ( எல்பிஎஃப்) கடுமையான விதிகளின் அடிப்படையில் இந்த படம் அங்கு திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தன்பாலின ஈர்ப்பு (LGBTQ) வாழ்க்கை முறையையோ அல்லது அது தொடர்பான கருத்துகளையோ ஊக்குவிக்கும் அல்லது சித்தரிக்கும் திரைப்படங்களுக்கு அந்நாட்டுத் தணிக்க வாரியம் அனுமதி வழங்குவதில்லை.

மலேசியாவின் பழமைவாத மற்றும் இஸ்லாமிய விழுமியங்களுக்கு இத்தகைய கதைக் களங்கள் முரணாகக் கருதப்படுவதால், இத்திரைப்படம் அந்நாட்டுத் தணிக்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாகக் கூறப்படுகிறது. அதனால் டோரதி படத்தை மலேசியாவில் வெளியிட அந்த நாட்டு சென்சார் போர்டு தடை விதித்த நிலையில் அங்கு இன்று டோரதி படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.

- Advertisement -

சற்று முன்