நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதிலும் இளம் வயதினர் பெரும்பாலும் விஜய் ரசிகர்களாக தான் இருக்கின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்களில் பலரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக இளம்பெண்கள், குடும்ப தலைவிகள் மத்தியிலும் விஜய் ரசிகைகளே அதிகளவில் காணப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அப்போது விழா மேடையில் சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் குழுவாக சேர்ந்து நடனம் ஆடுவது வழக்கமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பள்ளி ஆண்டு விழாவில் நடிகர் விஜயின் திரைப்பட பாடல்களே மாணவர்களின் பிரதான தேர்வாக இருந்து வருகின்றன.
ஏனென்றால் விஜய் நடனமாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் ட்ரெண்டிங்கில் இருப்பதால், பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களை மாணவர்கள் தேர்வு செய்து நடனமாடி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றனர். விஜய் பாடல்கள் ஒலித்தாலே அங்கு ஆரவாரமும் உற்சாகமும் ஏற்பட்டு விடுகிறது.
இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாக்களில் விஜயின் பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடும் போது டிவிகே என்று கட்சியின் பெயரையும் டிவிகே கட்சி கொடியையும் காட்டி மாணவர்கள் நடனம் ஆடுவது அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜயின் திரைப்படப் பாடல்களை அனுமதிக்க வேண்டாம். விஜயின் பாடல்களுக்கு மாணவர்களை நடனமாட அனுமதிக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பள்ளிகளில் பள்ளி வளாகத்துக்குள் அனைத்து சினிமா பாடல்களையும் தடை செய்வது எப்போது? விஜய் பாடல்களை மட்டும் தடை செய்தால் போதுமா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜயின் கட்சி சின்னம் விசில் என்பதால் துப்புரவு பணியில் ஈடுபடும் தூய்மை காவலர்கள் வீதிகளில் விசில் ஊதிக் கொண்டு செல்லக் கூடாது என்றும் பஸ்களில் கண்டக்டர்கள் விசில் அடிக்க கூடாது என்றும் திமுக சார்ந்தவர்கள் டார்ச்சர் செய்த தகவல்கள் இணையத்தில் வைரலாகின. இப்போது பள்ளி மாணவர்களுக்கும் அந்த கட்டுப்பாடு வந்துள்ளது. ஆனால் விஜய் வருகிற தேர்தலில் ஜெயித்து முதல்வராகி விட்டால், இதை எல்லாம் தடுக்க முடியாது என்று தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





