- Advertisement -
Homeபொழுதுபோக்குஏங்க எல்லாமே சேனலோட ப்ளானுங்க.. விசித்திரா சொன்னதெல்லாம் பொய்.. குண்டை தூக்கிப்போடும் பயில்வான் ரங்கநாதன்

ஏங்க எல்லாமே சேனலோட ப்ளானுங்க.. விசித்திரா சொன்னதெல்லாம் பொய்.. குண்டை தூக்கிப்போடும் பயில்வான் ரங்கநாதன்

- Advertisement -

தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறார் மன்சூர் அலிகான். த்ரிஷா பற்றி அவர் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி ஒரு பக்கம் மன்சூர் அலிகான் இருக்க மறுபக்கம் இன்னொரு ஹாட் டாபிக்காக மாறியிருப்பது பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருக்கும் நடிகை விசித்திராதான்.

அவர் சமீபத்தில் நடந்த ஒரு டாஸ்க்கின்போது, “டாப் ஹீரோ ஒருவருடைய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது.முதல் நாள் அவர் என்னை பார்த்ததும் நைட் என் ரூமுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டார். நான் அதிர்ச்சியாகி அன்றைய இரவு எனது ரூமில் சென்று படுத்து தூங்கிவிட்டேன். இது நடிகருக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவரது ஆட்களை அனுப்பி ரகளை செய்ய வைத்தார்.

அதன் பிறகு தற்போது எனக்கு கணவராக இருப்பவர் அந்த ஹோட்டலில் அப்போது மேனேஜராக இருந்தார். அவர் எனக்கு உதவி செய்து ஒவ்வொரு ரூமாக தங்க வைத்தார். இதனால் மேலும் கோபமடைந்தார் ஹீரோ. அதனையடுத்து ஆக்‌ஷன் காட்சிக்கான ஷூட்டிங்கில் ஒருவர் என் மீது தவறான முறையில் கை வைத்தார். நான் சண்டை பயிற்சியாளரிடம் முறையிட்டேன். அவரோ என்னை அறைந்துவிட்டார்.

இதுகுறித்து தமிழ் நடிகர்கள் சங்கத்திடம் முறையிட்டேன். ஆனால் யாருமே எனக்காக சப்போர்ட்டுக்கு வரவில்லை. என்னை மதிக்காத ஒரு இடத்தில் வேலை செய்வது சரியாக இருக்காது என்று எண்ணி திரைத்துறையிலிருந்தே விலகிவிட்டேன்” என்றார். விசித்திராவின் இந்த பேச்சு திரையுலகில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அந்த ஹீரோ பாலகிருஷ்ணாதான் எனவும் பலர் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோவில், “2000ஆம் ஆண்டு நடந்த விஷயத்தை ஏன் விசித்திரா இப்போது பேசுகிறார். மன்சூர் அலிகான் விவகாரம் பூதாகரமாகிக்கொண்டிருக்கும் சூழலில் விஜய் டிவி இந்த விஷயத்தை பிளான் போட்டு செய்கிறது. குடித்துவிட்டு வந்து ரூமை தட்டினார்கள். அப்போது எனக்கு உதவி செய்த மேனேஜர் எனக்கு இப்போது கணவர் என்று சொல்லும் விசித்திரா அப்போதே காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாமே.

பிக்பாஸை அதிகம் யாரும் பார்ப்பதில்லை. ரசிகர்களின் கவனத்தை திருப்புவதற்காகத்தான் நிகழ்ச்சி குழு இந்த விஷயத்தை ப்ளான் பண்ணி விசித்திராவை பேச வைத்திருக்கிறது. திருமணமாகி மூன்று குழந்தைகளை பெற்று நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த பாலியல் புகாரை ஏன் கூற வேண்டும். பெரிய நடிகர் என்று சொன்னால் மட்டும் போதுமா அவர் யார் என்று சொல்ல வேண்டாமா?. அந்த தைரியம் இல்லாதவர் இப்போது ஏன் சொல்கிறார். எல்லாமே பொய். அனுதாபத்தால் பிக்பாஸில் ஓட்டு வாங்கவும் அவர் இப்படி பேசியிருக்கலாம்” என்றார்.

சற்று முன்