- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் கூறியதாவது, எங்க வீட்டு வேலன் படத்துக்காக பால் காவடி பன்னீர் காவடி பாட்டு திருநீர்மலைகிட்ட சூட்டிங் எடுக்கிறேன். கடுமையா வெயில் கொளுத்துது. காலை கீழ வைக்க முடியலே கொதிக்குது. நான் சிம்பு கிட்ட வெயில் அதிகமா இருக்கு. கால்ல சாக்ஸ் செருப்பு மாட்டிக்கோ. நான் லோ ஆங்கிளில் வைத்து எடுக்கிறேன்னு சொன்னேன். அதுக்கு சிம்பு அப்பா நீ சூட்டை தாங்கிக்கொண்டு தானே நிற்கிறே என்று கேட்டான். நான் முருகனை நினைச்சிட்டு நிக்கறேன். அதனால் தான் சொன்னேன். அதுக்கு சிம்பு சொல்றான். நானும் தாங்குவேன் அப்பா. அந்த முருகன் என்னை தாங்க விடுவான்பா செருப்பு வேணாம்பா என்று ஆடினான். அந்த படம் பெரிய ஹிட் ஆனது என்று இயக்குனர் டி ராஜேந்தர் கூறியிருக்கிறார்.





