பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. கடந்த சீசனைவிட இந்த சீசன் பரபரப்பாக நகர்ந்துவருகிறது. குறிப்பாக பிரதீப்புக்கு பிக்பாஸும், கமல் ஹாசனும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதை பலர் ரசிக்கவில்லை. கடந்த வாரம் ஜோவிகா, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பி பிரதீப் மீது கமலிடம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அதாவது இரவு நேரத்தில் பிரதீப் சத்தமாக சிரிக்கிறார்; நடு ராத்திரி எழுந்து உட்கார்ந்துகொண்டு குறுகுறுவென்று பார்க்கிறார்; கதவை திறந்து வைத்துக்கொண்டு சிறு நீர் செல்கிறார்; பெண்களிடம் ஆபாசமாக பேசுகிறார் என்று பெரும் குற்றம் சுமத்தினர். அதனையடுத்து ஹவுஸ் மேட்ஸ்களிடம் கமல் ஹாசன் கன்ஃபெஷன் ரூமில் வைத்து தனித்தனியாக பேசினார்.
அப்போது பெரும்பாலானோர் பிரதீப் வீட்டில் இருக்க வேண்டாம் என்று கூறியதால் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல். ஆனால் அவரை வெளியேற்றுவதற்கு முன்னர் அவரிடம் ஒரு வார்த்தைக்கூட அவரது தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை. இது அனைவரையுமே அதிர்ச்சி அடைய செய்தது. முக்கியமாக கமல் ஹாசன் ஒருதலைபட்சமாக செயல்பட்டார் என்ற விமர்சனத்தையும் அது பெற்றிருக்கிறது.
சூழல் இப்படி இருக்க பிரதீப்புக்கு ஆதரவு வலுத்துக்கொண்டே செல்கிறது. ரசிகர்கள் பெரும்பாலானோர் பிரதீப்புக்கு நடந்தது நியாயமே இல்லை. பெண்களிடம் தவறாக நடக்கும் நிக்சன் எல்லாம் உள்ளே இருக்கிறார்; மாயா, பூர்ணிமா ஆகியோரும்கூடத்தான் நிக்சனிடம் தங்களது உள்ளாடையை காண்பித்தனர்; அடல்ட் ஜோக்குகளை பேசுகின்றனர். அவர்கள் எல்லாம் எப்படி உள்ளே இருக்கலாம் என கொந்தளித்துவருகின்றனர்.
அதேபோல் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் விசித்திரா, அர்ச்சனா ஆகியோரும் பிரதீப்புக்கு சாஃப்ட் கார்னரே வைத்திருக்கின்றனர். அதாவது பிரதீப் அவ்வாறு நடந்தகொண்டார்; பேசினார் என்றால் ஆரம்பமே அவரிடம் அதை ஏன் கண்டிக்கவில்லை. அப்போதெல்லாம் சிரித்து சிரித்து பேசிவிட்டு இப்போது அவர் மீது குற்றஞ்சாட்டுவது எல்லாம் மடத்தனம் என்று ஓபனாகவே பேசுகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோவில், “பிரதீப்பிடம் அவரின் பதிலை கேட்காமலேயே வெளியேற்றியது நியாயம் இல்லை. அப்படி செய்திருக்கவே கூடாது. இருந்தாலும் கமல் ஹாசன் அப்படிப்பட்ட ஆளும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவிடமிருந்து வந்திருப்பதை அவர் செய்திருக்கலாம்.
பெண்கள் பாதுகாப்பு என்ற அடிப்படையில் பிரதீப் வெளியேற்றப்பட்டிருக்கிறார். கமல் ஹாசனிடமிருந்து கௌதமி எதற்காக பிரிந்தார். தன்னுடைய மகளின் எதிர்கால நலனுக்காக பிரிகிறேன் என்று பிரிந்தார். அதனை மக்கள் யாராவது தப்பாக பேசினார்களா?.. பெண்கள் பாதுகாப்பு பற்றி கமல் பேசலாமா” என்றார்.





