- Advertisement -
Homeபொழுதுபோக்குபீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸை மாத்திட்டாங்க- ஆதங்கத்தில் குமுறும் பிரபலம், இது என்ன புதுசா இருக்கே?

பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸை மாத்திட்டாங்க- ஆதங்கத்தில் குமுறும் பிரபலம், இது என்ன புதுசா இருக்கே?

- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் வணிக அளவில் நல்ல வசூலை பெற்றிருந்தாலும் ரசிகர்களை அத்திரைப்படம் அவ்வளவாக ஈர்க்கவில்லை. இயக்குனர் நெல்சன், “பீஸ்ட்” படத்தில் திரைக்கதையை சொதப்பி விட்டார் என பல விமர்சனங்கள் எழுந்தது.

நெல்சன் அதற்கு முன்பு இயக்கிய “டாக்டர்” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்திருந்தது. மேலும் அத்திரைப்படத்தில் காமெடியும் ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆதலால் ரசிகர்கள் அதே எதிர்பார்ப்போடு “பீஸ்ட்” திரைப்படத்திற்கு வந்தனர். ஆனால் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

‘பீஸ்ட்” திரைப்படம் வெளிவந்தபோது விஜய் ரசிகர்களே அத்திரைப்படத்தை விமர்சித்தார்கள். குறிப்பாக அத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய், பயங்கரவாதியை கொன்றுவிட்டு ஜெட்டில் பயணிக்கும் காட்சியை பலரும் கேலி செய்தனர். ஆதலால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான அபிஷேக் ராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பீஸ்ட் படம் வெளிவருவதாக இருந்த சமயத்தில் அத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பயங்கரமாக இருக்கும் என்று நான் ஒரு டிவிட் போட்டேன். நிஜமாகவே ஸ்கிரிப்டில் அந்த கிளைமேக்ஸ் காட்சியை மிகவும் பயங்கரமாக படமாக்க திட்டமிட்டிருந்தார்கள். அது எழுதப்பட்ட விதமே வேறு ஒன்றாக இருந்தது.

ஆனால் வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க, அவர்களின் திட்டத்தை மாற்றவேண்டியதாக போய்விட்டது. ஆதலால்தான் அந்த கிளைமேக்ஸ் அவ்வாறு இருந்தது. ‘பீஸ்ட் கிளைமேக்ஸ் பயங்கரமா இருக்கும்ன்னு சொன்னீங்களே’ என்று இன்று வரை அந்த டிவிட் போட்டதற்காக என்னை பலரும் கேலி செய்வார்கள்” என்று கூறியிருந்தார்.

சற்று முன்