நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதற்கான முன்பதிவு திரையரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் தங்கள் டிக்கெட்டை ரசிகர்கள் உறுதி செய்து வருகின்றனர். சென்னையின் முக்கிய திரையரங்குகளில் முதல் நாள் காட்சி நிரம்பி வருகிறது.
இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பிற்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் இயக்குனர் ஞானவேல் தான் இதற்கு மையப் புள்ளியே. கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமாகி இருந்தாலும், ஜெய் பீம் திரைப்படம் தான் அவரது கேரியரை மாற்றி அமைத்தது.
உண்மை கதையை உரக்கக் கூடியதால் ஞானவேல் அந்த திரைப்படத்தின் மூலம் பாராட்டப்பட்டார். இப்படியான சூழலில் தான் அவர், ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அடுத்ததாக நாம் பார்க்கப்போவது படத்தில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திரங்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை இந்த திரைப்படத்திற்காக அழைத்து வந்திருக்கிறார் ஞானவேல்.
இது மட்டுமல்லாமல் மலையாளத்திலிருந்து பகத் பாசில், மஞ்சு வாரியர், தெலுங்கில் இருந்து ராணா மற்றும் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு மனைவியாக நடிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆசிரியர் கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் வருகிறார். பகத் பாசில், ராணா கதாபாத்திரம் தற்போது வரை சஸ்பென்சாக வைக்கப்பட்டிருக்கிறது.
என்கவுண்டரை ஆதரிக்கும் கதாபாத்திரத்தில் ரஜினியும், அதனை எதிர்க்கும் ரோலில் அமிதாப்பச்சனும் நடித்திருக்கிறார்கள். ட்ரெய்லர் சுமாராக இருந்தாலும் படத்தில் கன்டென்ட் அதிகம் இருப்பது அதனை பார்க்கும் போது தெரிந்தது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி இருந்த மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வேட்டையன் குறித்து பேசி இருக்கும் ஞானவேல், இந்தப் படத்திற்கு முன்பு நான் சூர்யாவுடன் தான் மீண்டும் இணைவதாக இருந்தது. இதற்கான கதையையும் தயார் செய்து நான் பிரீ ப்ரோடக்சன் வரை சென்று விட்டேன். அந்த சமயத்தில், வேட்டையனுக்கான வாய்ப்பு கிடைத்த போது, சூர்யா முதலில் அதில் கவனம் செலுத்துமாறு கூறிவிட்டார். அவருக்கும் இந்த திரைப்படத்தின் கதை தெரியும். ரஜினி சார் நடித்த நன்றாக இருக்கும் என்று அவரே தெரிவித்தார் என ஞானவேல் பேசி இருக்கிறார்.





