- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜின் எல்சிவுக்குள் வரும் மற்றொரு மலையாள நடிகர்... அதுவும் ராகவா லாரன்ஸ்க்கு வில்லனாக வருகிறார்...

லோகேஷ் கனகராஜின் எல்சிவுக்குள் வரும் மற்றொரு மலையாள நடிகர்… அதுவும் ராகவா லாரன்ஸ்க்கு வில்லனாக வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா…

- Advertisement -

விக்ரம் திரைப்படத்தின் மூலம் எல் சி யு வை அறிமுகப்படுத்தியவர் லோகேஷ் கனகராஜ். அந்த திரைப்படத்தில் தனது முந்தைய திரைப்படமான கைதி திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்திருந்தார் லோகேஷ். அது மிகச் சரியாக ஒர்க் அவுட் ஆனது என்றே கூறலாம். கைதியின் முக்கிய கதாபாத்திரங்கள் அதில் கிளைமாக்ஸ் காட்சியில் வருவார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக விக்ரம் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சூர்யா ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் வந்தது பெரும் ஆச்சரியமாக அமைந்தது. சொல்லப்போனால் அந்த திரைப்படத்தை அடுத்த தளத்திற்கு அது எடுத்துச் சென்றது. இப்படி விக்ரம் படமே லோகேஷ் கனகராஜை, மாஸ் இயக்குனரின் பட்டியலுக்கு அழைத்துச் சென்றது.

- Advertisement -

இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அதிலும் எல் சி யூ கான்செப்ட்டை வைத்திருந்தார். அதில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயிடம் கமல்ஹாசன் செல்போனில் பேசுவது போன்று அமைந்திருக்கும். அதேபோல் கைதியில் காவலராக நடித்தவரும் லியோவில் இடம் பெற்றிருப்பார்.

ஆனால் அது எல் சி யு என்னும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்றும், ரசிகர்களை ஏமாற்றும் வகையிலேயே அது அமைந்ததாகவும் பலர் கூறினர். இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். அது எல் சி யு வுக்குள் வராது என்று அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க அவரது தயாரிப்பில் பென்ஸ் திரைப்படம் உருவாகிறது. இதனை, ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை எடுத்த பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இதற்கு இசை அமைக்க உள்ளார். இதன் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அண்மையில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், பென்ஸ் திரைப்படம் எல் சி யு வில் வரும் என்று கூறியிருந்தார்.

அப்படி என்றால் நிச்சயம் இது விக்ரம் கைதி லியோ ஆகிய திரைப்படங்களுடன் கனெக்ட் ஆகும் என ரசிகர்கள் கூறி வந்தனர். இப்படி இருக்க பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு வில்லனாக மலையாள நடிகர் நிவின்பாலி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகிறது. எல் சி யு வுக்குள் நிவின்பாலி வந்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்