- Advertisement -
Homeபொழுதுபோக்குஉன் பையனை வெச்சு நீயே படம் எடு, நான் எடுக்க மாட்டேன் - எஸ்ஏ சந்திரசேகரை...

உன் பையனை வெச்சு நீயே படம் எடு, நான் எடுக்க மாட்டேன் – எஸ்ஏ சந்திரசேகரை திருப்பி அனுப்பிய இயக்குனர் இமயம் பாரதிராஜா!

- Advertisement -

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவால் நேற்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாத்துறையினர் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் விஜய் டெல்லி பயணத்திற்கு முன்பாக பாரதிராஜா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இயக்குனர் பாரதிராஜா கிராமிய பின்னணி கொண்ட படங்களை எடுப்பதில் சிறந்து விளங்கியவர். ஸ்டுடியோக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் படங்களை திறந்தவெளிக்கு கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரர்.

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜாவிடம் ஒரு நாள் தனது மகன் விஜயை வைத்து ஒரு கிராமத்து படம் எடுக்குமாறு அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பாரதிராஜா, இந்த தகவலை அவரே ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார் இந்த வீடியோவை தான் தற்போது முதல்வர் விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது, ஒரு நாள் எஸ்ஏ சந்திரசேகர் அவரது மகன் விஜயை என்னிடம் அழைத்துக்கொண்டு வந்தார். உன்னுடைய கிராமத்து படத்தில் விஜய் நடிக்க ஆசைப்படுகிறான் என்று கூறினார். எனக்கு அப்படி தோணவில்லை. இந்த பையன் வேண்டாம். நீயே உன் மகனை வைத்து ஒரு படம் இயக்க வேண்டியது தானே? என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டேன்.

- Advertisement -

ஆனால் அன்று நான் நிராகரித்த விஜய் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். இதை நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன். நீ வேண்டாம் என்று நான் உன்னை திருப்பி அனுப்பி விட்டேன் என்று கூறினேன். அதற்கு நீங்கள் என்னை ரிஜெக்ட் செய்தது என் மனதில் இன்னும் இருக்கிறது என்று விஜய் கூறியதாக அந்த வீடியோவில் பாரதிராஜா கூறியிருந்தார்.

கடந்த 2020ம் ஆண்டு விஜயின் பிறந்தநாள் அன்று பாரதிராஜா அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு அழகான பதிவை செய்திருந்தார். அதில், என் கலைப்பயணத்தில் துரதிஷ்டவசமாக நான் தவிர்த்த ஓர் விதை, இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின் சொத்தாக உலகமே கொண்டாடும் விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கோடிக் கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கிற வெற்றியின் வி என்ற முதல் எழுத்தாக கொண்ட விஜய்க்கு 46வது பிறந்தநாளில் எல்லா சிறப்பும் பெற்று நீடூடி வாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் என்று பாரதிராஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்