- Advertisement -
Homeபொழுதுபோக்குசெல்போனை கொதிக்கம் சாம்பாரில் போட்ட குழந்தை, கவிஞர் நா முத்துக்குமார் செய்த செயல் - நேரில்...

செல்போனை கொதிக்கம் சாம்பாரில் போட்ட குழந்தை, கவிஞர் நா முத்துக்குமார் செய்த செயல் – நேரில் பார்த்த எழுத்தாளர் பாவா செல்லதுரை!

- Advertisement -

எழுத்தாளர் பாவா செல்லத்துரை சிறந்த எழுத்தாளராக இலக்கிய உலகில் கவனம் பெற்றவர். அவர் மிகச் சிறந்த ஒரு கதை சொல்லி. அவர் படித்த கதைகளை அவர் சொல்லும் போது அந்த கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக பயணித்த அனுபவம் அதை நேரில் கேட்பவர்களுக்கு ஏற்படும். அந்த அளவுக்கு ஒரு கதை சொல்லியாக அவர் இருக்கிறார்.

சில திரைப்படங்களில் சில கேரக்டர்களில் அவர் நடித்தும் இருக்கிறார். மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் ஒருமுறை போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஆனால் சில வாரங்களிலேயே என்னால் இங்கு இருக்க முடியாது. எனக்கு ஏற்ற இடமாக இந்த வீடும் மனிதர்களும் இல்லை என்று அவராகவே வெளியே வந்து விட்டார்.

- Advertisement -

இலக்கிய கூட்டங்களில் அடிக்கடி பங்கேற்கும் வழக்கம் கொண்ட எழுத்தாளர் பாவா செல்லத்துரை மறைந்த கவிஞர் நா முத்துக்குமாருடன் நெருக்கமான நட்பில் இருந்தவர். அவருடன் பல நாட்கள் பழகியவர் என்ற முறையில் அவரது கண் எதிரில் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் எழுத்தாளர் பாவா செல்லதுரை மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் குறித்து கூறியதாவது, கவிஞர் நா முத்துக்குமாரை போல் அவர் பையனை நேசித்த ஒருவரை நான் பார்த்ததே இல்லை. கொதிக்கும் சாம்பாரில் செல்போனை அவரது மகன் போட்டுவிட்டார். அதை பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் உடனே பதறிவிட்டோம். ஆனால் முத்துக்குமார் அந்த குழந்தையை அடிக்கவில்லை. எதுவுமே திட்டவில்லை.

- Advertisement -

வேறு செல்போன் வாங்கிக்கலாம் என்று அமைதியாக சொன்னார். நான் கூட இவ்வளவு பாசம் கூடாது என்றேன். அதற்கு முத்துக்குமார், அண்ணே குழந்தைன்னா போனை எடுத்து சாம்பாரில்தான் போடும் என்றார். இன்று அந்த குழந்தைகள் தகப்பன் இல்லாமல் வாழ்கிறார்கள் என உருக்கமாக அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக குழந்தைகள் இதுபோன்ற குறும்புகளை செய்வது எல்லா வீடுகளிலும் நடப்பதுதான். ஆனால் யாராக இருந்தாலும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பல அரிய தகவல்களை புகைப்படங்களை வைத்திருக்கிற செல்போனை கொதிக்கும் சாம்பாரில் குழந்தை போட்டால் கோபம் வருவது இயல்பு. ஆனால் அப்போதும் குழந்தை பாசத்தால் நா முத்துக்குமாரின் இந்த செயல் தந்தையர் தினம் கொண்டாடும் இந்த சூழலில் மனதை நெகிழச் செய்கிறது.

- Advertisement -

சற்று முன்