பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி இணையத்தில் வைரலானவர் ஜூலி. பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல அடையாளம் பெற்றார்.
தொடர்ந்து டிவி சேனல்கள் மற்றும் சினிமாவில் சின்ன சின்ன வாய்ப்புகள் ஜூலிக்கு கிடைத்த நிலையில் அவர் பெரிய அளவில் சினிமாவில் பிரபலமாக முடியவில்லை. இந்நிலையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வரும் ஜூலி சமீப காலமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சி குறித்தும் கட்சியின் தலைவர் விஜய் குறித்தும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
திமுகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறிவரும் ஜூலி தொடர்ந்து விஜய் குறித்து கிண்டலாகவும் கேலியாகவும் பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய ஜூலி, திமுகவுக்கு ஆதரவாக தவெக குறித்து நான் எதிர்மறை கருத்துக்களை வெளியிடுவதால் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கின்றனர்.
கிட்னி திருட்டில் ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். வயிற்றில் இருந்த என் குழந்தையின் கரு கலைந்து போனதற்கு விஜய் தான் காரணம். அவரது ரசிகர்களும் கட்சியினரும் தொடர்ந்து என்னை இணையதளத்தில் தாக்கி வருகின்றனர் என்று புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக நடத்திய ஜென்ஸி நிகழ்ச்சியிலும் பிக்பாஸ் ஜூலி கலந்துக் கொண்டார். இதற்கிடையே திருச்சியில் நேற்று தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று பேசிய நிலையில் இப்போது அதுகுறித்தும் கிண்டலாக ஒரு வீடியோவை பிக்பாஸ் ஜூலி வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ஜூலி கூறியிருப்பதாவது, வேலூர் பரப்பறையில் விஜய் பேசியதில் ஒன்றுமில்லை என்று நான் சொன்னதுக்கு தான் கிட்னி சட்னி என்று தூக்கிட்டு வந்தாங்க.
இப்போது திருச்சியிலும் அவர் பேசியதில் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஆனால் அவர் வேறு நிர்வாகம் பொறுப்பல்ல என்று திருச்சியில் பேசி மிரட்டியிருக்கிறார். அதெல்லாம் பார்த்தால் அண்ணா பயமா இருக்குதுண்ணா ரொம்பவும் பயமா இருக்குதுண்ணா என்று மீண்டும் முதல்வர் விஜயை கிண்டலடித்து ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.





