- Advertisement -
Homeபொழுதுபோக்குஆமாங்க ரஜினிக்கு விஜய் மீது பொறாமைதான்.. என்ன இந்த பிரபலம் டப்புனு இப்படி போட்டு உடைச்சிட்டாரு

ஆமாங்க ரஜினிக்கு விஜய் மீது பொறாமைதான்.. என்ன இந்த பிரபலம் டப்புனு இப்படி போட்டு உடைச்சிட்டாரு

- Advertisement -

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார் விஜய். குறிப்பாக அவரை அவரது ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இதன் காரணமாக விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் உச்சக்கட்ட பகை எழுந்திருக்கிறது. ஜெயிலர் படம் ஹிட்டானதை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள் தலைவர்தான் எப்போதும் நிரந்தரம் என கூறினர். அதற்கு விஜய் ரசிகர்களோ லியோ படம் வெளியாகட்டும் தலைவர் நாற்காலியை தளபதி பிடித்துவிடுவார் என்று கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் தொடங்கியிருக்கிறது. பல நாடுகளில் ப்ரீ புக்கிங்கில் ஜெயிலர் படத்தின் சாதனை லியோ துவம்சம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ட்ரெய்லர் வெளியாகி ஒரு நாளில் 30 மில்லியன் பார்வைகளை கடந்து ஜெயிலரை முந்தியது லியோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் லியோ படத்துக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கான அனுமதியை கொடுத்திருக்கிறது. ஆனால் ஜெயிலர் படத்துக்கு அந்த அனுமதி கிடைக்கவில்லை. இது ரஜினியை கொஞ்சம் அப்செட் ஆக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனை வருடங்கள் சினிமாவில் இருக்கிறார். அவருக்கு விஜய் எல்லாம் ஒரு ஆளா போட்டியா என்று சிலர் பேசுகிறார்கல்.

ஆனால் உண்மையில் விஜய்யின் வளர்ச்சி ரஜினிக்கு உறுத்தலாகத்தான் இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் ஜெயிலர் படத்துக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி கேட்டு படக்குழு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அரசோ அனுமதி தரவில்லை. ஆனால் லியோ படத்துக்கோ சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைத்திருக்கிறது.

- Advertisement -

லியோ படத்துக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைத்த விஷயத்தை தெரிந்துகொண்ட ரஜினி கொஞ்சம் அப்செட்டாகிவிட்டார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஃபோன் செய்து ஜெயிலர் படத்துக்கு கிடைக்காத சிறப்பு காட்சி அனுமதி எப்படி லியோ படத்துக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. அனுமதி வாங்குவதற்கான வேலையை ஏன் நீங்கள் செய்யவில்லையா என கேட்டிருக்கிறார். உண்மையில் விஜய் மீது ரஜினிக்கு பொறாமை இல்லை என்றால் அவரது படம் எப்போது எப்படி ரிலீஸானால் நமக்கென்ன என்று ரஜினி இருந்திருக்கலாமே. ஆனால் அவர் அப்படி இல்லையே” என்றார்.

- Advertisement -

சற்று முன்