- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்கள் அரணை உடைக்க வந்து விட்டான் காளமாடன்... பைசன் படத்திலிருந்து முக்கியமான அப்டேட்டை வெளியிட்ட மாரி...

உங்கள் அரணை உடைக்க வந்து விட்டான் காளமாடன்… பைசன் படத்திலிருந்து முக்கியமான அப்டேட்டை வெளியிட்ட மாரி செல்வராஜ்…

- Advertisement -

வாழை திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் பைசன். சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக கபடி விளையாட்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டார் துருவ் விக்ரம்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஆக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்த அனுபமா, பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் போதே அதில் கதாநாயகியாக நடிக்க மாரி செல்வராஜ் தன்னை அணுகியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் கால் ஷீட் பிரச்சனை காரணமாக தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

மாமன்னன் திரைப்படத்திலும் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் கடைசியில் பைசன் திரைப்படத்திலேயே தனது விருப்பம் நிறைவேறி இருப்பதாகவும் அனுபமா தெரிவித்திருந்தார். மேலும் பைசன் திரைப்படம் மிகவும் அருமையாக வந்திருப்பதாகவும், மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படங்களிலேயே இது முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் சொல்லியிருந்தார்.

அனுபமா பரமேஸ்வரனை தவிர இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார். இது போக லால், பசுபதி, கலையரசன், அருவி மதன் உள்ளிட்ட ஏராளமானோர் இடம் பெற்று இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் மனத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்னும் கபடி வீரர், தேசிய அளவில் புகழ்பெற்று விளங்கினார்.

- Advertisement -

அவரின் வாழ்க்கையைதான் மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதையை மாரி செல்வராஜ் வடிவமைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் பட பூஜை திருநெல்வேலி அருகே நடைபெற்றது. அதில் சீயான் விக்ரம் கலந்து கொண்டார். தொடர்ந்து திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படத்தை படமாக்கினார்கள்.

மாரி செல்வராஜ் இதுவரை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில், முதல்முறையாக நிவாஸ் கே பிரசன்னா உடன் இணைந்துள்ளார். பைசன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல், வரும் ஒன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பைசன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்