ரஜினி வரிசையாக இரண்டு தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். அதேபோல்தான் விஜய்யும். இருப்பினும் விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் ரஜினியின் இரண்டு படங்களும் அவ்வளவு வசூலை ஈட்டவில்லை என்றும் பேசப்பட்டது. இதன் காரணமாக ரஜினியின் சம்பளம் குறைந்துவிட்டது. சம்பளம் மட்டுமில்லை வியாபாரமும் படுத்தேவிட்டது என பலர் கூறினர்.
அதுமட்டுமின்றி வியாபாரத்தில் விஜய்தான் இப்போதைக்கு நம்பர் ஒன். அதனால் விஜய்யே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கொளுத்திப்போட ஆரம்பித்தனர். இந்த விவாகரம் பல பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்தது. தொடர்ந்து ஜெயிலர் படத்திலிருந்து வெளியான ஹுக்கும் பாடலில் இடம்பெற்ற வரிகள் நேரடியாக விஜய்யை தாக்குகிறது என்று ரஜினி ரசிகர்கள் கூறினர். அதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதில் பேசிய ரஜினி, “காட்டில் இருக்கும் சின்ன மிருகங்கள் எல்லாம் எப்போதுமே பெரிய மிருகங்களை தொல்லை செய்துகொண்டே இருக்கும். உதாரணமாக காக்கா எப்பவுமே கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனால் கழுகு எப்போதும் அமைதியாக இருக்கும்.
பறக்கும்போது கழுகை பார்த்து காக்கா உயரமாக பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால் அது முடியாது. ஆனால் கழுகு இறக்கையைக்கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயர்த்தில் பறந்துகொண்டே இருக்கும். உலகின் உன்னதமானமொழி மௌனம். சூப்பர் ஸ்டார் படத்துக்கு இப்போ பிரச்னை இல்லை அது 1977ஆம் ஆண்டே ஆரம்பித்துவிட்டது”என்றார்.
அவரது இந்தப் பேச்சு ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் அமைந்துவிட்டது. மேலும் ரஜினி விஜய்யைத்தான் காக்கா என்று மறைமுகமாக சொல்கிறார். இதற்கு லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி மூலம் விஜய் பதிலடி கொடுப்பார் என அவரது ரசிகர்கள ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் நடித்த படத்தின் ஒரு காட்சியில் காக்கா என்று ஹீரோயின் கூப்பிடுவது போலவும் அதற்கு விஜய் வந்து கூப்பிட்டீங்களா என கேட்கும் வீடியோவை பகிர்ந்து பருந்துக்குஞ்சுகள் இந்த வீடியோவை பல இடங்களில் ஷேர் செய்து வருவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
பருந்துக்குஞ்சுகள் இந்த வீடியோவை பல இடங்களில் ஷேர் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. pic.twitter.com/vuIV9aR4LK
— Blue Sattai Maran (@tamiltalkies) July 31, 2023
இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாள் ரஜினியை கிண்டலடித்துக்கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறன் இப்போது விஜய் பக்கம் லைட்டை திருப்பியிருக்கிறாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





