- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதெல்லாம் மக்களின் வரிப்பணம் தானே? தமிழ்நாட்டில் நடப்பது மன்னராட்சி தான், இதை கொஞ்சம் நிறுத்துக மகாராஜா...

இதெல்லாம் மக்களின் வரிப்பணம் தானே? தமிழ்நாட்டில் நடப்பது மன்னராட்சி தான், இதை கொஞ்சம் நிறுத்துக மகாராஜா – முதல்வர் விஜயை கலாய்த்து தள்ளிய பிரபலம்!

- Advertisement -

சினிமாவில் நடிக்கும் போது காட்டிய பில்டப்பை தனது நிஜ வாழ்க்கையிலும் அப்படியே காட்டி வருபவர் முதல்வர் விஜய் என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது. சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறும் விஜய், நிஜத்தில் மக்கள் முன் தினமும் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூட சமீபத்தில் விமர்சித்து இருந்தார்.

நடிகர் விஜயை பொருத்த வரை இன்னமும் சினிமா பிம்பம் மாறாத ஒரு அரசியல்வாதியாக தான் மக்களிடையே இருந்து வருகிறார். அவரை அவரது தவெக கட்சி சார்ந்தவர்களே சினிமா ஹீரோ என்ற பார்வையில் தான் இன்னமும் ரசித்து பார்த்து வருகின்றனர். ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக அவர் இன்னும் மாறவில்லை.

- Advertisement -

இதற்கிடையே பஞ்ச் டயலாக் பேசுவதும் சினிமாவில் நடிப்பது போல் ஸ்டைல் செய்து காட்டுவதும் அவரது உடல்மொழி அசைவுகளை ரீல்ஸ் போட்டு மக்களிடையே வைரலாக்குவதும் இன்னமும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியை தரும் நிலையில் தமிழக மக்களுக்கு கடும் கோபத்தை எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் நடந்து வந்த இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை மறுதினம் இங்கு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதிகளில் விஜய் பிரசாரத்துக்கு வந்த போது ரோடுகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பேரிகார்டுகள் வைத்து தடுக்கப்பட்டு இருந்தன.

- Advertisement -

ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல மக்கள் கூட்டமே இல்லாத 10 பேர் 20 பேர் கூட எட்டிப்பார்க்காத இடங்களில் இப்படி பல கிலோமீட்டர் தூரத்துக்கு பேரிகார்டுகள் வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வியாபாரிகள் தொழில் நிறுவன உரிமையாளர்கள் பலத்த நெருக்கடியை சந்தித்தனர்.

இதுகுறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் கூறியிருப்பதாவது, யாரும் எட்டிப் பார்க்காத இடங்களில் கூட எதற்கு இரு புறமும் இத்தனை தடுப்புகள்? இதெல்லாம் மக்களின் வரி பணம் தானே? உலகின் மாபெரும் மன்னர்கள் கூட இத்தனை பில்டப் காட்டியதில்லை. உண்மையில் இதுதான் மன்னராட்சி. இனியாவது கிலோமீட்டர் கணக்கில் பேரிகார்டு வைப்பதை நிறுத்துக மகாராஜா என்று ப்ளு சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்