- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்கை அமரன் ரோஜா இணைந்து நடித்த லெனின் பாண்டியன் படம் எப்படி? - ரசிகர்களை கவருமா?...

கங்கை அமரன் ரோஜா இணைந்து நடித்த லெனின் பாண்டியன் படம் எப்படி? – ரசிகர்களை கவருமா? அட அந்த பிரபலமே இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிகை ரோஜா இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் லெனின் பாண்டியன் படம் கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பாலச்சந்திரன் டைரக்ட் செய்திருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருக்கிறார்.

அதில் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, இந்த கதையை ஆழமாக சொன்னால் அதில் இருக்கும் சஸ்பென்ஸ் எல்லாம் போய்விடும். எனவே நீங்களே படம் பார்த்தால் புரியும். ஒரு நாட்டில் பெரிய பணக்காரனை காப்பாற்றுவதற்காக இந்த சிஸ்டம் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என்பதை ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பதை அருமையாக காட்டி இருக்கிறார்கள். நீதிமன்ற காட்சிகள் எல்லாம் சூப்பராக இருந்தன. நல்ல நீதிபதியிடம் ஒரு வழக்கு சிக்கியது என்றால் என்ன நடக்கும் என்பதையும் அழகாக காட்டியிருக்கிறார்கள். ஜார்ஜ் மரியான் கேரக்டர் மற்றும் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் அருமை. கதை சீரியஸாக போனாலும் நமக்கு சிரிப்பாக தான் இருக்கும். இடைவேளைக் காட்சி அட்டகாசம். நாம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும்.

நான் சொன்ன இந்த பாயிண்ட்ஸ் எல்லாம் முதல் பாதி வரையில் தான். இரண்டாவது பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும் சில குழப்பங்களும் இருந்தன. முதல் பாதியளவுக்கு படம் இல்லை. கங்கை அமரனின் கேரக்டரை ரொம்ப நன்றாக வடிவமைத்து இருந்தார்கள். அவரது நடிப்பு சில இடங்களில் கூடுதலாக இருந்தாலும் பல இடங்கள் சூப்பர். ரோஜாவை திருமணம் செய்த கதையை சொல்லும் இடமெல்லாம் அட்டகாசம். தர்ஷனும் சூப்பரா நடித்திருக்கிறார். ஹீரோயினும் அருமையாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி இந்த படத்துக்கு இளையராஜாவின் பின்னணி இசை பெரிய பலமாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாதி எல்லோருக்குமே பிடிக்கும். 2வது பாகம் தான் பிரச்சனை. இந்த கதைக்கு இது கிளைமாக்ஸ் இல்லையே என்று தோன்றி விட்டால் இது உங்களுக்கு சுமாராக தான் தெரியும். இந்த கிளைமேக்ஸ் தான் சரி என்று தோன்றினால் நல்ல படமாகவே தெரியும். இதை அனைத்தையும் தாண்டி ஒரு முழு படத்தில் நான்கு நல்ல சீன்களை எதிர்பார்ப்போம்.

அது கூட இல்லாமல் தான் மகுடம் டாக்ஸிக் பாரடைஸ் படங்களை எடுத்தார்கள். அதை பார்க்கும்போது நீங்கள் எல்லாம் ஏன் படம் எடுக்கிறீர்கள் என்று தான் தோன்றும். ஆனால் இதில் நான்கு நல்ல சீன்கள் இல்லை. முதல் பாதி முழுவதுமே நன்றாகத்தான் இருக்கிறது. 2வது பாதியில் கூட மாறுபட்ட கருத்துதான் இருக்கிறது ஒழிய மோசமான படம் இல்லை என்று ப்ளு சட்டை மாறன் லெனின் பாண்டியன் படத்தை விமர்சித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்