- Advertisement -
Homeபொழுதுபோக்குபோர்த்தொழில் டைரக்டர் படமா இது? நம்பவே முடியலே - கர படம் குறித்து விளாசித் தள்ளிய...

போர்த்தொழில் டைரக்டர் படமா இது? நம்பவே முடியலே – கர படம் குறித்து விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் கர. இந்த படம் வெளியான நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, கர படத்தின் கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா போர்த்தொழில் இயக்குனர் திரைக்கதையாக இயக்கிய விதம் தான் போர் அடிக்குது.

இந்த படம் விறுவிறுப்பாகவோ ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் சுவாரசியமாகவோ இல்லை. விவசாயிகளுக்கு கடன் கொடுத்து நிலங்களை பிடுங்கிக் கொள்கின்றனர் வங்கி மேலாளர்கள் என படத்தை இயக்குனர் எடுத்து வைத்துள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருந்தால் தான் படம் ஓடும்.

- Advertisement -

ஆனால் போலீஸாக வரும் சுராஜ் வெஞ்சரமுடு ஒரு சிரிப்பு போலீஸாக காமெடியாக்கி உள்ளனர். ஊரில் பெரிய நிலங்களை வைத்திருப்பவர்கள் தான் டிராக்டர் வாங்குவார்கள். ஆனால் 8 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் நபர்கள் எல்லாம் வீட்டுக்கு ஒரு டிராக்டர் வாங்கி வைத்துக்கொண்டு அதற்கு வட்டி கட்ட முடியாமல் ஒட்டுமொத்த நிலத்தையே இழந்துவிட்டதெல்லாம் கதையில் நுணுக்கமான ரைட்டப் இல்லாததையே காட்டுகிறது.

இது ஒரு பீரியட் படம் என்று சொல்லிக் கொண்டு வராங்க. ஆனா அந்த காலகட்டத்தை உணர்த்தும் வித்தியாசமும் டீட்டெயிலும் படத்தில் சரியாகவே இல்லை. 90களில் நடக்கும் கதை என்று சொல்லப்பட்டாலும் அந்த காலத்தில் அரசியல் பொருளாதார சூழ்நிலை மக்களின் வாழ்க்கை ஆழமாக பிரதிபலிக்கப்படவில்லை.

- Advertisement -

ஈராக் குவைத் போர் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு போன்ற விஷயங்கள் வெறும் பின்னணி தகவலாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. கதை சொல்லும் மையமாக மாற்றப்படவில்லை. படத்தின் மையக்கரு வங்கிக் கொள்ளை என்றாலும் அதற்கான திரைக்கதை விறுவிறுப்பாக இல்லை. வங்கி கொள்ளை நடக்கப்போவது முன்னதாக போலீசுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை மிக சாதாரணமாகவே காட்டப்படுகிறது. அதில் எந்த சஸ்பென்ஸ்சும் பதட்டமும் இல்லை.

கதாநாயகன் மீண்டும் மீண்டும் திருட்டில் ஈடுபடுவதற்கான காரணங்கள் உணர்ச்சிகரமாக இருந்தாலும் அதை திரில்லர் ஸ்டைலில் மாற்றிக் காட்ட இயக்குனர் தவறிவிட்டார். படம் முழுக்க டெட் ஸ்லோ. எப்போது படம் முடியும் என்று தோன்றும் அளவுக்கு போர் அடிக்கிறது. போர்த்தொழில் மாதிரி ஒரு வெற்றிப் படம் எடுத்த இயக்குனர் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு இந்த படம் இல்லை என்று ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்